மாடர்ன் டிரெஸ் மட்டுமில்லங்க..! சேலையில் கலக்கும் சீரியல் நடிகை ரச்சிதா!
சின்னத்திரையில் ‘பிரிவோம் சந்திப்போம்’சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரட்சிதா. அதனை தொடர்ந்து, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறினார். ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டு சீசனின் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து தற்போது, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து திடீ ரென அதிலிருந்து அதிரடியாக விலகினாா். அவருக்கு பதில் அரண்மனை கிளி சீரியலில் நடித்த நடிகை நடித்து வருகிறார்.
தற்போது அவா் கலர்ஸ் தமிழ் டிவியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவா் விஜய் டிவியிலிருந்து தாவி கலர்ஸ் தொலைக்காட்சியில் தனது பயணத்தை மாற்றி இருக்கிறார்.
தொடர்ந்து, சீரியலில் மட்டுமல்லாது தனது சமூக வலைத்தள பக்கங்களையும் பிசியாகவே வைத்து இருக்கிறார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது சேலையில் அம்மன் சிலையில் போல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காலையிலே கண்ணுக்கு குளிா்ச்சியாக புடவையில் மங்களகரமாக காட்சியளிக்கும் போட்டோவை பார்த்து ரசிகா்கள் கமெண்ட்ஸ் அள்ளி வீசி வருகின்றனா்.