ஹீரோயினுக்கு ஃபை ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு.. கேப்டனுக்கு தெருக்கடையா? என்ன நடந்துச்சு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு தலை சிறந்த நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளல் கொடையாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் ஒரு தலை சிறந்த தலைவராக இருந்தார். இவரின் குணநலன்கள், உதவி செய்யும் மனப்பான்மை இவற்றையெல்லாம் பார்த்த மக்கள் இவரை குட்டி எம் ஜி ஆர் என்றே அழைக்க தொடங்கினார்கள்.
எம்ஜிஆர் போன்றே விஜயகாந்த் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஒரு முனைப்புடனே இருந்து வந்தார். அதுவும் சாப்பாடு விஷயத்தில் யாருக்கும் எந்த ஒரு குறையும் வைக்கக்கூடாது என மனதார விரும்பியவர் விஜயகாந்த். அவர் வீட்டுக்கு யார் போனாலும் வயிறார சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம்!.. பாடலில் பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!..
அவரால் பயன்பெற்ற பல பேர் இன்று வரை சொல்வது விஜயகாந்த் வீட்டுக்கு எப்பொழுது போனாலும் அங்கு சாப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.வந்தவர்களை சாப்பிட வைத்து தான் அனுப்புவார் என்று தான் சொல்கிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் பட்ட அவமானம். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென ஷாட் ரெடி ஆகிவிட்டது. அப்புறம் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் கூறி பாதியிலேயே எழுந்து போன காலம் எல்லாம் விஜயகாந்த் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
இதையும் படிங்க: எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்!.. ஆசையாக கேட்ட விஜயகாந்த்!… ராவுத்தர் அடித்த கமெண்ட்!..
இதன் தாக்கம் தான் சாப்பாட்டில் யாருக்கும் குறை வைக்க கூடாது என நினைத்து அதிலிருந்தே அனைவருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்திருக்கிறார் விஜயகாந்த். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சுப்பையா ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அம்மன் கோயில் கிழக்காலே என்ற திரைப்படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை கூறி இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்ததாம். அப்பொழுது விஜயகாந்த் மற்றும் படத்தில் உள்ள மற்ற டெக்னீசியன்களுக்கு உள்ளூர் கடையிலிருந்து தான் சாப்பாடு வரவழைக்க பட்டதாம். ஆனால் படத்தில் நடித்த ஹீரோயின் ராதாவுக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருந்து ஸ்பெஷலான சாப்பாடு வரவழைக்கப்பட்டதாம்.
இதையும் படிங்க: அஜித் சிகிச்சையில் இவ்ளோ ரிஸ்க்கா? இல்லைனா அந்தப் பிரபலத்துக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்
இதைப் பற்றி கூறிய தயாரிப்பாளர் சுப்பையா அந்தப் படமே ஹீரோவை நம்பி தான் இருந்தது. ஆனால் சாப்பாடு விஷயத்தில் விஜயகாந்த்துக்கு இப்படி பண்ணியது எனக்கு வேதனையாக இருந்தது என கூறி இருக்கிறார்.