“உங்க படம் பார்த்தா கொல்லனும் போல தோணுது”… ரஜினியை நேரிலேயே வம்புக்கு இழுத்த ராதா ரவி…

by Arun Prasad |
Rajinikanth and Radha Ravi
X

Rajinikanth and Radha Ravi

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வரும் ராதா ரவி, தனித்துவமான நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சமீப காலமாக எந்த ஒரு பேட்டியிலும் மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார் ராதா ரவி.

Radha Ravi

Radha Ravi

உதாரணமாக, “அருணாச்சலம்” திரைப்படத்தில் ராதா ரவி நடிப்பதாக இருந்தது. அப்போது ரஜினிகாந்த், அவரை வீட்டிற்கு அழைத்து “நீங்கள் இந்த திரைப்படத்தில் இல்லை. நாங்கள் வேறு ஒரு நடிகரை போட்டுவிட்டோம்” என கூறினாராம். இப்படி நம்மை நேரில் கூப்பிட்டு அசிங்கப்படுத்துகிறாரே என ராதா ரவி நினைக்கத் தொடங்கினாராம். உடனே ராதா ரவி ரஜினியை பார்த்து “சினிமாவில் உள்ள சாபக்கேடு என்னவென்றால் திறமை அதிர்ஷ்டத்தை நோக்கி வரவேண்டியதாக இருக்கிறது” என கூறினாராம். இந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார் ராதா ரவி.

இவ்வாறு யாராக இருந்தாலும் தன் மனதில் பட்டத்தை நேருக்கு நேர் கூறுபவராக திகழ்பவர் ராதா ரவி. இந்த நிலையில் “நாயகன்” திரைப்படத்தை குறித்து ஒரு முறை ரஜினியிடம் பேசியபோது நடந்த சம்பவத்தை குறித்து ராதா ரவி ஒரு பொது விழாவில் பகிர்ந்துள்ளார்.

Nayakan

Nayakan

அதாவது “நாயகன்” திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக ரஜினியிடம் கூறியிருக்கிறார் ராதா ரவி. அதற்கு ரஜினிகாந்த் “அப்படியா?” என கேட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து “நான் இன்னொரு படம் ஒன்று பார்த்தேன். அந்த படத்தை பார்த்து கொல்ல வேண்டும் என்று தோன்றியது” என கூறியிருக்கிறார். ரஜினி என்ன படம்? என கேட்க “மனிதன்” என பதிலளித்திருக்கிறார் ராதா ரவி. இதனை கேட்டதும் ரஜினி “யோவ், அது நான் நடிச்ச படம்தான்யா” என்றாராம்.

இதையும் படிங்க: “உனக்கு இசைன்னா என்னன்னு தெரியுமாடா??”… கங்கை அமரனை கண்டபடி பேசிய இளையராஜா…

Manithan

Manithan

“ஆமா சார், நீங்க நடிச்ச படம்தான்” என அவரிடமே தைரியமாக கூறியிருக்கிறார் ராதா ரவி. மேலும் அவர் “மனிதன் பட கிளைமேக்ஸில் அணுகுண்டுகளை சட்டையில் மாட்டிக்கொண்டு சண்டை போடுவீர்களே. அப்படி உண்மையில் அணுகுண்டை கட்டிக்கொண்டு சண்டை போடமுடியுமா? வெடிச்சிடும்ல சார்” என ரஜினியிடம் கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி “அப்படியா?” என கேட்டாராம்.

“அது ஏன் சார், அப்படி தொங்கவிட்டு சண்டை போட்றீங்க? அது என்ன சட்டை டிசைனா?” என நக்கல் அடித்தாராம் ராதா ரவி. “யோவ், யார்யா நீ இப்படி எல்லாம் பேசுற” என்றாராம் ரஜினிகாந்த்.

Next Story