எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் எங்க அப்பாவுக்கு கீழ தான்... எம்.ஆர் ராதா காலில் விழுந்த நடிகர் திலகம்... ராதா ரவி ஓபன்...!

by ramya suresh |
எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் எங்க அப்பாவுக்கு கீழ தான்... எம்.ஆர் ராதா காலில் விழுந்த நடிகர் திலகம்... ராதா ரவி ஓபன்...!
X

பிரபல நடிகரான ராதாரவி பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் வில்லன் என்று கூறினால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ராதாரவியை தான். பல படங்களில் கொடூர வில்லனாக நடித்து அசதி இருக்கின்றார். இவர் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் அவர்களுக்கு இணையாக நடித்த பிரபலமானவர்தான் எம் ஆர் ராதா.

இவரும் ஏகப்பட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்திருக்கின்றார். அவரைப் போலவே அவரது மகனான ராதாரவியும் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கின்றார். தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகின்றார். 71 வயதான நிலையிலும் சினிமாவில் சுறுசுறுப்பாக நடித்து வந்தவர் நடிகர் ராதாரவி.

சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். டப்பிங் யூனியன் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு நடக்க முடியாமல் நடந்து வந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. இந்நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்திருக்கின்றார்.

அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் தனது உடல்நலம் குறித்து பேசி இருந்த அவர் என் காலில் சிறு பிரச்சனை அதனால் ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. தற்போது நான் குணமாகி வருகின்றேன். அதற்குள் என்னால் நடக்க முடியவில்லை என்று பல youtube களில் கூறி விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து தனது தந்தை குறித்து பேசி இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது "என் அப்பா எம்ஜிஆர், சிவாஜியை காட்டிலும் 10 வயது மூத்தவர். அவருக்கு கீழ்தான் எம்ஜிஆர், சிவாஜி எல்லாம். நடிகர் திலகம் சிவாஜி என் அப்பாவை அவ்வளவு மரியாதையாக நடத்துவார். ஒருமுறை வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி இருந்த சூழலில் எங்கள் வீட்டிற்கு வந்து என் அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றார்.

அப்போது எனது தந்தை என் நாடக கம்பெனியில் நடித்த நடிகன் இப்போது வெளிநாட்டிற்கு விருது வாங்க செல்கிறான் என்பது எவ்வளவு பெருமையாக இருக்கின்றது என்று என் அம்மாவிடம் கூறினார். என் அப்பாவுக்கு சினிமா தான் எல்லாமே. என் அப்பா மிக பிஸியான நடிகர், எங்களிடம் பேசுவதற்கு கூட அவருக்கு நேரம் இருக்காது" என்று தனது தந்தை குறித்து அவர் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

Next Story