Cinema News
கொளுந்துவிட்டு எரிந்த டப்பிங் யூனியன் பிரச்னை!… தடைகளை உடைத்து தலைவரான ராதாரவி…
RadhaRavi: தமிழ் சினிமாவின் டப்பிங் யூனியன் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. அதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மீண்டும் தலைவராக பதிவியேற்று இருக்கிறார் ராதாரவி. மேலும் சில சுவாரஸ்யமான தகவலும் வெளியாகி இருக்கிறது.
டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் மீண்டும் தலைவர் போட்டியில் ராதாரவி போட்டியிட்டார். அவருக்கு எதிராக ராஜேந்திரன், சற்குணராஜ் போட்டியிட்டார். இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏகப்பட்ட பிரச்னைகள் வெடித்தது.
இதையும் படிங்க: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 100 கோடிக்கும் மேல் கல்லா கட்டிய திரைப்படங்கள்!.. மாஸ் காட்டும் ஜெயிலர்..
மூன்று தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர். இதில் இன்னும் அதிர்ச்சிதரும் விஷயமாக ராதாரவி தன்னிடம் முறைத்தவறி நடந்து கொண்டதாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஓபனாக பேட்டி கொடுத்து இருந்தார். இதை தொடர்ந்து டப்பிங் யூனியன் பிரச்னை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த பிரச்னையில் சின்மயி பிரச்னை பிரதானமாக பேசப்பட்டது. மஞ்சள் நிற கார்ட் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும். வெள்ளை நிற கார்ட் வைத்திருந்த விஜய் புதுப்பிக்க வேண்டாம். சின்மயி பொய் சொன்னதாகவும் ராதாரவி காட்டமாக பேசி இருப்பார். இப்படி வரிசையாக பிரச்னை நீடித்து கொண்டதாகவே இருந்தது.
இதையும் படிங்க: ரோகினிக்கு பயத்தை காட்டிய விஜயா… முத்துவுக்கு காரை பரிசாக கொடுத்த மீனா…