விக்ரம் படத்தில் ராதிகா இருக்காங்களா... இது எப்போங்க நடந்தது?
கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் ராதிகாவும் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். படம் வேறு லெவல் ஹிட். இப்படம் இதற்கு முன்னர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவே எடுக்கப்பட்டு இருந்தது.
கமல், சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி, அம்பிகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தியாவில் முதன்முறையாகக் கம்ப்யூட்டர் வசதியுடன் இசைக்கப்பட்ட படம் என்ற சிறப்பும் பழைய விக்ரம் படத்திற்கு உண்டு.
இத்திரைப்படத்தினை ராஜசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் நாயகி லிசிக்கு குரல் கொடுத்தது நடிகை ராதிகா தானாம். அதுவும் கமல் தான் இந்த படத்திற்கு டப்பிங் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்தே ராதிகா டப்பிங் பேசினார் என லிசி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.