விஜயகாந்துலாம் ஒரு ஹீரோவா?.. நிறத்தை காரணம் காட்டி நடிக்க மறுத்த ராதிகா...
திரைத்துறையில் வளரும்போது ஒரு நடிகர் நேரிடையாகவே அல்லது தனக்கு பின்னாலோ அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதை தவிர்க்கவே முடியாது. ஒரு நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் முன் வர மாட்டார், இவரை ஹீரோவாக போட்டு நான் படம் எடுக்க மாட்டேன் என இயக்குனர் சொல்வார், இவரெல்லாம் ஒரு ஹீரோவா? இவருக்கு ஜோடியாகவெல்லாம் நான் நடிக்கமாட்டேன் என நடிகை சொல்வார்.
இப்படி பல அவமானங்களை சில நடிகர்கள் சந்திப்பார்கள். ஆனால், அதேநடிகர் ஒரு வழியாக வாய்ப்பை பெற்று படங்களில் நடித்து பெரிய நடிகராக மாறிவிட்டால் எல்லாம் மாறிவிடும். இது ரஜினி, விஜயகாந்த், விஜய் என எல்லோருக்கும் நடந்திருக்கிறது. இதுதான் சினிமா.
இது கேப்டன் விஜயகாந்துக்கு பல முறை நடந்துள்ளது. இவருடன் நடிக்க மாட்டேன் என பல நடிகைகள் கூறியுள்ளனர். அதில் ராதிகாவும் ஒருவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.. ஆனால், அதுதான் உண்மை.
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி. 80களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் ஒருமுறை சொந்தமாக ஒரு படம் தயாரிக்க நினைத்தார். நடிகை லட்சுமியின் கணவர் சிவசந்திரன் எழுதிய கதை அது. நடிகர் மோகனின் கால்ஷீட்டுக்காக அழைந்தார்.
ஆனால், அவர் பிஸியாக இருந்தார். அப்போதுதான் விஜயகாந்தை அணுகலாம் என சிலர் கூறியுள்ளனர். அவரும் கதையை கேட்டு நடிக்க சம்மதித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க ராதிகாவை அணுக வடிவுக்கரசி முடிவு செய்தர். ஆனால் ‘அந்த கருப்பனா.. அவருக்கு ஜோடியாக நான் நடிக்க மாட்டேன்.. எவ்வளவு ஹீரோ இருக்கிறார்கள்..உங்களுக்கு விஜயகாந்துதான் கிடைத்தாரா’ எனக்கூறினாராம் ராதிகா. இந்த தகவலை வடிவுக்கரசியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே ராதிகா பின்னாளில் விஜயகாந்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்ததோடு, ஒருகட்டத்தில் அவரை திருமணம் செய்யவும் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி உன் மூஞ்சியை கண்ணாடில பாத்துருக்கியா?.. கேள்வி கேட்ட பிரபலத்தை தலைகுனிய வைத்த நாகேஷ்..