வயசான காலத்துல கவர்ச்சி தேவையா உனக்கு! - ராதிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...
கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஏற்கனவே திருமணமாகி மகள் இருந்த நிலையில் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் மகனும் பிறந்தான்.
ஒருபக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சீரியல்களிலும் கலக்கினார் ராதிகா. அவர் நடித்த சித்தி, அண்ணாமலை ஆகிய சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது சிம்புவுக்கு அம்மாவாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கோவா சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒன்று.
இந்த புகைப்படத்தை சில ரசிகர்கள் ‘இந்த வயசுல இது உங்களுக்கு தேவையா?.. உங்க மேல மரியாதை இருக்கு’ என பொங்கி வருகின்றனர். சிலரோ இதை கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர்.