டாப் ஹிட் கேரக்டரை மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய ராகவா லாரன்ஸ்…! ஆனா கடைசியில நடந்தது தான் ட்விஸ்ட்டு..!

Raghava Lawrence: தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகம் ஆனால் கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் மிகப்பெரிய ஒரு ஹிட் படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டு அதுக்கு செம ஃபீல் பண்ணினாராம்.
ராகவா லாரன்ஸ் சின்ன சின்ன படங்களில் நடித்தாலும் அவர் நடிப்பில் வெளியான காஞ்சனா படங்கள் மிகப்பெரிய ரீச்சை அவருக்கு கொடுத்தது. தொடர்ச்சியாக தற்போது அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி இரண்டாம் பாகம் சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..
அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் கூட லாரன்ஸ் என்னுடைய தொண்டு நிறுவனத்துக்கு யாரும் நிதி தர வேண்டாம். இனி நான் வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். அந்த சம்பளத்தில் இருந்து என் நிறுவனத்தினை பார்த்து கொள்வதாக தெரிவித்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தினை ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்து இருக்கிறார். இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய லாரன்ஸ், எனக்கு கதிரேசனும், கார்த்திக் சுப்புராஜும் ஜிகர்தண்டா முதல் பாகத்தின் கதையை கூறினார்கள். அப்போ அது சிம்பிளா தான் இருந்துச்சு.
இதையும் படிங்க: நடிகைகள் மட்டுமா? சிம்புவை நம்பி தெருவில் நின்னவங்க பல பேரு!.. அட இத்தனை பேரா?…
அந்த நேரத்தில் தான் தெலுங்கில் நடித்து கொண்டு இருந்தேன். அதனால் ஜிகர்தண்டா சேது கதாபாத்திரத்தினை என்னால் பண்ண முடியவில்லை. பட ரிலீஸ் சமயத்தில் போய் தியேட்டரில் படம் பார்த்தேன். எனக்கு அதன் பின் இரண்டு நாட்கள் தூக்கமே இல்லை. இந்த படத்தினை மிஸ் செய்துவிட்டோமே என வருத்தப்பட்டேன்.
அந்த படம் எப்போ டிவியில் போட்டாலும் மாத்த சொல்லி விடுவேன். ஆனா இப்போ சந்தோஷமா இருக்கேன். அந்த படத்தில் நடித்து இருந்தால் இந்த படத்தில் என்னால் நடித்திருக்க முடியாது. ஜிகர்தண்டாவை விட இந்த பாகம் மேலும் சுவாரஸ்யமாகவே இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.