Cinema News
தலைவர் சொன்னதை ராகவா லாரன்ஸே கேட்கலயே!.. நெல்சனுக்கு கொடுத்த சரக்கு பார்ட்டி!…
நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ஷோகேஷ் வீடியோக்களில் நிறைய பில்டப்புகள் இருந்தது. ரஜினிக்காக பல மாஸ் காட்சிகளை வைத்து இப்படத்தை நெல்சன் உருவாக்கியிருந்தார்.
கடந்த 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, முதள் நாளே இப்படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இரண்டாம் நாள் 60 கோடி, மூன்றாம் நாள் 50 கோடி என 3 நாட்களில் மொத்தம் 200 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
சந்திமுகி திரைப்படத்திற்கு பின் சிவாஜி, எந்திரன், 2.0, பேட்ட தவிர பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, ரஜினிக்கே ஒரு ஹிட் படம் தேவையாக இருந்தது. இந்த நிலையில்தான் ஜெயிலர் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நண்பர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தவரை பிரபுதேவாவுடன் சேர்த்துவிட்டவர் ரஜினிதான். அந்த நன்றி உணர்ச்சியும் ராகவா லாரன்ஸுக்கு உண்டு. அதன்பின் ராகவா லாரன்ஸ் படிப்படியாக சினிமாவில் நடிக்க துவங்கி இப்போது ஹீரோவாக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினி விஜய் ரெண்டு பேரையும் வச்சி!.. நெல்சனுக்கு வந்த விபரீத ஆசை!. வொர்க் அவுட் ஆகுமா?!..
ஜெயிலர் படத்தின் வெற்றி ராகவ லாரன்ஸுக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. எனவே, நெல்சனுக்கு சென்னை ஐடிசி சோழா கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் ஒரு சூட் ரூமை போட்டு பார்ட்டி கொடுத்துள்ளார் லாரன்ஸ். இந்த பார்ட்டியில் லிங்குசாமி உள்ளிட்ட சில இயக்குனர்களும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
பார்ட்டி என்றால் கண்டிப்பாக மது விருந்து என சொல்ல தேவையில்லை. ஜெயிலர் ஆடியோ விழாவில் பேசிய ரஜினி ‘உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். மது அருந்துவதை விட்டு விடுங்கள்’ என அவரின் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னார். ஆனால், அவரின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸே அதை கேட்கவில்லையே என சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினிக்கே போன் போட்டு வாழ்த்தினாரா விஜய்?.. ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்!.. என்னங்க நடக்குது!..