பெட்டோட வந்துடுறேன்!.. கார்த்திக் சுப்புராஜை பார்த்து ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை!.. ஏன் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், இந்த தீபாவளி வின்னர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் என்றும் இயக்குநர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், ஜெயம் ரவி, தனுஷ் என பல பிரபலங்கள் அந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: சோலி முடிஞ்சு!.. அனிமல் படத்தின் ரன் டைம் இவ்ளோவா.. இதுல ரெண்டு இங்கிலீஷ் படம் பார்த்துடலாம்!..

நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் போட்டு பாராட்டியது மட்டுமின்றி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் குழுவினரை நேரில் வரவழைத்து சந்தித்து பாராட்டிய புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், நேற்று படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் மேடையேறி பேசிய ராகவா லாரன்ஸ் காஞ்சனா ஸ்டைல் படங்களில் இருந்து தான் மாற வேண்டும் என விரும்பி கார்த்திக் சுப்புராஜிடம் பேச ஆரம்பித்தது தான் இந்த படம் உருவாக காரணம் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் என் ஸ்டைல் நடிப்பையோ, டான்ஸையோ பயன்படுத்த விடாமல் காலை ஆட்டிக் கொண்டே அவர் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிப் படைத்தார்.

இதையும் படிங்க: பாகுபலி படத்துக்கு செஞ்சதை விட!.. கங்குவா படத்துக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணியிருக்கோம் – மதன் கார்கி!..

அப்போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என்ன இந்த மனுஷன் ஸ்டைலா ஒரு ஸ்டெப் போட கூட விடமாட்றானே என நினைத்தேன். ஆனால், படம் வெளியானதும் அதற்கு கிடைத்த மதிப்பை பார்த்து அசந்து போய் விட்டேன். அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் பெட்டோட வந்துடுறேன்.. நீங்க படுத்துக் கொண்டே நடிக்க சொல்லுங்க நான் பண்றேன் என பாராட்டி பேசியுள்ளார்.

 

Related Articles

Next Story