அக்காவை தொடர்ந்து மாஸ் காட்ட களமிறங்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!... ஹீரோ யார் தெரியுமா?

by Akhilan |
அக்காவை தொடர்ந்து மாஸ் காட்ட களமிறங்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!... ஹீரோ யார் தெரியுமா?
X

Soundarya Rajinikanth: ரஜினிகாந்த் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பது போல அவர் மகள்களும் அப்பாவிற்கு இருக்கும் தற்போதைய புகழை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்து விட்டனர். அக்கா செல்லும் அதே ரூட்டில் தற்போது அவரின் தங்கை செளந்தர்யாவும் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

கிட்டத்தட்ட ரஜினிகாந்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த புகழால் குஷியான ரஜினிகாந்த் தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.

இதையும் படிங்க: குடித்து விட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்!.. அவருக்கு நான் மூன்றாம் மனைவி… ரகசியத்தினை உடைத்த ராஜ்கிரண் மகள்

இப்படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள் தொடர்ந்து ரிலீசாகி வரும் நிலையில் படத்தின் மீது அதிகபட்ச எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அப்பா இப்படி என்றால் மகள்களும் கிடைக்கும் நேரத்தினை சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். மூத்த மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர்.

இவர்களை விட ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதும் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அடுத்த வாரம் லால் சலாம் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அக்காவை போல தங்கை செளந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தினை இயக்க களமிறங்கி இருக்கிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக வேடம் ஏற்க இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பு பணிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: பரோட்டா காமெடி இந்த ஹீரோவுக்கு செய்தது தான்!… சுதீந்திரன் கேட்டதால் கொடுத்துவிட்டேன்.. இயக்குனர் சொன்ன ஷாக்!

Next Story