ரகுவரன்:
தமிழ் சினிமாவில் வில்லன் ரோலில் கலக்கி பிறகு குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்ற நடிகர் ரகுவரன். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரகுவரன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிறமொழிகளிலும் நடித்துள்ளார்.வில்லனாக நடித்து மாஸ் காட்டியதை விட குணச்சித்திர கேரக்டரில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தார் ரகுவரன்.
பாட்ஷாவில் மார்க் ஆண்டனியாக ஒரு மறக்க முடியாத கேரக்டரில் நடித்தார். இவரின் நடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக முதல்வன், அமர்க்களம், சிவாஜி, சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களை குறிப்பிடலாம். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார் ரகுவரன். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
மெனக்கிடும் விதம்:
ரகுவரன் மற்றும் ரோகிணி சில காலம் மட்டுமே ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். ஆனால் இன்று வரை ரோகிணிக்கு ரகுவரன் மீது தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. தான் ஏற்று நடிக்கும் கேரக்டருக்கு ரகுவரன் மெனக்கிடும் விதமே ஆச்சரியமாக இருக்கும் என அனைவருக்குமே தெரியும்.
அந்த கேரக்டருக்காக ஒரு நாள் முழுவதும் தன் வீட்டிலேயே பிராக்டிஸ் செய்து வருவார். அந்த கேரக்டராகவே இருப்பார் ரகுவரன். அப்படி முகவரி படத்தில் அவரின் நடிப்பை பற்றியும் அதற்காக அவர் மெனக்கிட்ட விதம் பற்றியும் அந்தப் படத்தின் இயக்குனர் துரை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். முகவரி படத்தில் ஒரு சிறந்த அண்ணனாக, அப்ப்பாவாக, மகனாக, கணவராக என பன்முக திறமையை காட்டியிருப்பார் ரகுவரன்.

முகவரி பட இயக்குனர்:
இந்த நிலையில் அவரை வைத்து தன்னுடைய இரண்டாவது படத்தையும் ஆரம்பிக்க இருந்தாராம் இயக்குனர் துரை. முகவரி படம்தான் துரை இயக்கிய முதல் படம். இரண்டாவது படத்தை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் துரை. அதில் ஒரு முக்கிய கேரக்டருக்கு ரகுவரனை அப்ரோச் செய்திருக்கிறார் துரை. ரகுவரனும் அந்த கேரக்டரை பற்றி முழுவதும் கேட்டு கொண்டாராம்.
நல்ல ஒரு கேரக்டர். ஆனால் இதை நான் நடித்தால் செத்துருவேன் என ரகுவரன் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அந்த கேரக்டர் என்னுடைய தாத்தன் கேரக்டர் துரை சார். என்னுடைய வாழ்வியலை தொடர்புபடுத்தி இருப்பதால் அதற்குள் நான் முழுவதும் மூழ்கி விடுவேன். அதன் பிறகு என்னால் அதிலிருந்து மீண்டு வரவே முடியாது. அதனால் இதில் நான் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார் ரகுவரன்.
ஆனால் ஒரு இயக்குனருக்கு அதுதானே வேண்டும். இயக்குனரும் எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் என பலபேரை வைத்து ரகுவரனிடம் பேசியும் பார்த்திருக்கிறார். ஆனால் ரகுவரன் சம்மதிக்கவே இல்லையாம். ரகுவரன் நடிக்க முடியாது என்று சொன்னதால் அந்தப் படத்தை துரை அப்படியே டிராப் செய்துவிட்டார்.
