கமல்ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த ரகுவரன்... பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..

by Arun Prasad |   ( Updated:2022-10-02 06:08:57  )
கமல்ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த ரகுவரன்... பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..
X

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன் சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் கமல்ஹாசனின் கேரியரிலேயே மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் 400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும், உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார்.

அதே போல் அத்திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார். கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

எந்த வேடத்தையும் சிறப்பாக செய்பவர் கமல்ஹாசன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் சினிமாவுக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பவர். சினிமாவை தன் வாழ்வியலாகவே ஆக்கிக்கொண்டவர் கமல்ஹாசன் என்று கூறினால் கூட அது மிகையாகாது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்,,”கமல்ஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. ஆனால் அவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த திரைப்படங்களாக இருந்தாலும் எடிட்டிங்கில் தலையிட்டு தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சக நடிகர் யாராவது நடிப்பில் ஸ்கோர் செய்தால், அந்த காட்சியை கொஞ்சம் எடிட் செய்வார். இது அவரை பொறுத்தவரையிலும் திரைக்கதையை பொறுத்தவரையிலும் சரி. ஆனால் அந்த சக நடிகருக்கு சங்கடம். இந்த காரணத்தினால் தான் ரகுவரன் கமல்ஹாசன் திரைப்படங்களில் இருந்து வரும் வாய்ப்புகளை மறுத்துவந்தார்” என கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் கமல் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் ரஜினிகாந்த் பல மேடைகளில் “என் நடிப்பை பார்த்து தனியாக ஹீரோவாக படம் நடியுங்கள் என கமல்ஹாசன் கூறினார்” என கூறுவது உண்டு. அதே போல் நாசர் என்ற அற்புதமான நடிகரை தனது பல திரைப்படங்களில் பயன்படுத்தியவர் கமல்ஹாசன். இது போன்ற விவாதங்கள் இணையத்தில் எழுந்துவருகிறது.

Next Story