அந்த நடிகையை லவ் பண்ணி மன உளைச்சலுக்கு ஆளானேன்!.. ரகுவரனுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..
தமிழ் சினிமாவில் அசத்தல் வில்லனாக வலம் வந்தவர் ரகுவரன். அவரின் கணீர் குரல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். திரையில் இவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஏழாவது மனிதன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.
ஒருகட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். அப்போதுதான் ரகுவரன் எப்படிப்பட்ட சிறந்த நடிகர் என்பதே பலருக்கும் தெரியவந்தது. குறிப்பாக ரஜினியுடன் படங்களில் வில்லனாக வருவார். அதிலும், பாட்ஷா படத்தில் அவர் ஏற்ற ஆண்டனி கதாபாத்திரம் இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது எனில் அவர் காட்டிய நடிப்பு அப்படி. பாஷா மட்டுமில்லை பல படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரகுவரன்.
இதையும் படிங்க: அந்த படத்தை பார்த்துட்டு ரகுவரன் இப்படி சொல்லுவாருனு நினைக்கல! சுந்தர்.சி பகிர்ந்த ரகசியம்
வில்லனாக மட்டுமில்லை. பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் ரகுவரன் கலக்கியுள்ளார். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சில வருடங்கள் ரகுவரனுடன் வாழ்ந்த ரோகினி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார். அதன்பின் தனியாக வசித்துவந்த அவர் 2008ம் வருடம் இறந்துபோனார்.
80களில் ரகுவரன் ஹீரோவாக நடிக்கும்போதே ஒரு நடிகையை காதலித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.. ஆம் உண்மையில் அது நடந்தது. 1987ம் வருடம் வெளியான திரைப்படம் கூட்டுப்புழுக்கள். இந்த படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக அமலா நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்தபோது அமலா மீது ரகுவரனுக்கு காதல் ஏற்பட்டது. இதை அவர் அமலாவிடமும் கூறியுள்ளார். ஆனால், அவரின் காதலை அமலா ஏற்கவில்லை. இதில், ரகுவரன் மனமுடைந்து போனாரம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பின்னாலில் அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யாரும் அவர தேடி போகல!.. அவர்தான் வாண்டடாக வண்டியில் ஏறுகிறார்… ரஜினியை சீண்டும் பிரபலம்!..