More
Categories: Cinema History Cinema News latest news

ஹிட்டடித்த ஐ நோ டயலாக்…! ஓவர் இம்சை செய்த ரகுவரன்… காண்டாகிய கே.எஸ்.ரவிக்குமார்… சூப்பர் பின்னணி!

Raghuvaran Dialogue: கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரகுவரன் நடிப்பில் உருவான படம் புரியாத புதிர். இப்படத்தில் ரகுவரன் சொன்ன ஐ நோ டயலாக் இன்று வரை ரசிகர்களிடம் ட்ரெண்ட்டாக இருக்கிறது. ஆனால் இந்த டயலாக்கின் பின்னணி தான் சுவாரஸ்யமான விஷயம் எனக் கூறி இருக்கிறார் ரவிக்குமார்.

புரியாத புதிர் 1990ம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ஒரு நாடகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டர்கா என்ற கன்னட படத்தின் ரீமேக் ஆகும். ஆர்.பி. சௌத்ரி இப்படத்தினை தயாரித்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உன் படத்தை 1000 ரூபாய் கொடுத்து யாராவது பார்ப்பானா!.. ரஜினி பற்றி எஸ்.வி. சேகர் பேச்சு!..

தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி, அகதா கிறிஸ்டியின் 1958 ஆம் ஆண்டு நாடகமான தி அன் எக்ஸ்பெக்டட் கெஸ்ட் என்ற கன்னடத் திரைப்படமான தர்காவை முதல் மலையாளத்தில் சோத்யம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார் சௌத்ரி. 

அப்போது விக்ரமனின் உதவியாளராக இருந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை எழுதச் சொல்லி இருக்கிறார். எதிர்பார்க்காத அளவு ரவிக்குமார் ஒரே வாரத்தில் திரைக்கதையை முடித்தார். அதில் மகிழ்ந்த சவுத்ரி உடனே அவரை இயக்குனராக அறிவித்தார். 

படத்தை ஒரு நாளைக்கு 1 லட்சம் செலவில் 30 நாளில் படமாக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலம் படத்தின் மொத்த பட்ஜெட் 30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரவிக்குமார் முழுப் படத்தையும் 29 நாட்களில் முடித்து, தயாரிப்பாளருக்கு ஒரு லட்சத்தை மிச்சப்படுத்தினார்.

இதையும் படிங்க: அப்பாடி இப்பவாது மனசு வந்துச்சே… அஜித்தின் திடீர் செயல்… கலக்கத்தில் இருந்த மகிழ் திருமேனியே குஷி ஆகிட்டாரு!

இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன் ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷனில் சொல்லி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். ஆனால் அதன் பின்னர் ரவிகுமாரை காண்டாக்கிய தகவலும் இருக்கிறது. பெரும்பாலும் ரகுவரனுக்கு ஒவ்வொரு ஷாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமாம்.

அப்படி இந்த குறிப்பிட்ட காட்சியில் 10 பக்கம் டயலாக் இருந்து இருக்கிறது. இதை பார்த்த ரவிக்குமார் கணவன் மனைவி மீது சந்தேகப்படும் இந்த காட்சியை எடுக்க மாலை ஆகிவிடுமே என கோபமாக்கியவர். உடனே பேப்பரை சுக்கு சுக்காக கிழித்து விட்டு ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷனில் பேசு எனச் சொல்லி விட்டாராம். ஆனால் அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts