Connect with us
SRP

Cinema History

பிரபு, சத்யராஜை பத்தி பேசுவாங்களான்னு தெரியாது… ஆனா என்னைப் பத்திப் பேசுவாங்க… அதான் ரகுவரன்!

1978ல் வெளியான படம் அண்ணா நகர் முதல் தெரு. சத்யராஜ், அம்பிகா, ராதா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு கெஸ்ட் ரோல்ல நடித்து இருப்பார். இந்தப் படத்தில் ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இயக்குனர் பாலு ஆனந்த். இது காந்தி நகர் 2வது தெரு என்ற மலையாளப்படத்தின் ரீமேக். அந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகன். பிரபு கேரக்டரில் மம்முட்டி நடித்து இருந்தார். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு பக்கத்தில் நடந்ததாம். இரவு நேரத்தின் போது நடந்த படப்பிடிப்புக்கு நண்பரும் ரகுவரனுடன் சென்றாராம். அப்போது ரகுவரன் நண்பரிடம் சொன்னது இதுதான். இந்தப் படத்தில் சத்யராஜ், பிரபு எல்லாரும் நடிச்சிருக்காங்க.

ANM

ANM

படம் பார்த்துட்டு வெளியே வர்ற ரசிகர்கள் அவங்களைப் பத்தி பேசுவாங்களான்னு தெரியாது. ஆனா… என்னைப் பத்தி கண்டிப்பா பேசுவாங்கன்னு சொன்னாராம். அது அப்படியே நடந்ததாம். அதுக்கு காரணமே படத்தல வர்ற அவரோட கேரக்டர் தான்.

ரகுவரன் படத்தில் 5 காட்சிகளில் தான் வருகிறாராம். மனைவி இறந்ததால் துவண்டு போன கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் வருகிறார். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு புலம்புவது தான் அவரது கேரக்டர். அது தினமும் அவருக்கு வாடிக்கை என்பதால் அண்ணா நகர் காலனியில் உள்ளவர்களுக்கு அது பெரிதாகத் தெரியாது. அவர்களுக்கு டிவி, ரேடியோவில் வழக்கமாக ஒளி(லி)பரப்பாகும் நிகழ்ச்சி போலவே தெரியும்.

ஆனால் ரகுவரன் புலம்பும்போது மனைவியைப் பற்றி பெருமையாகவும் சொல்வார். அதை அங்குள்ளவர்கள் ரசனையாய் கேட்பார்களாம். தினமும் வரும் இந்த புலம்பல் ஒரு நாள் மட்டும் வரவில்லை. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். இன்னைக்கு மட்டும் ஏன் புரொபசர் புலம்பலயேன்னு பார்த்தாங்களாம். மறுநாள் காலையில் தான் அவர்களுக்குத் தெரிந்தது புரொபசர் இறந்துட்டாங்க.

அது அவர்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையைக் கொண்டு வந்து விட்டது. படத்தில் அவர் 5 சீன்களே வந்தாலும் மனதை கொள்ளை கொண்டு விடுகிறார். படம் பார்த்த ரசிகர்களும் வெளியே வருகையில் ரகுவரன் சொன்ன மாதிரியே அவரைப் பற்றி சிலாகித்துப் பேசினார்களாம். ரகுவரன் எவ்வளவு தீர்க்கத்தரிசி என்று பார்த்தீர்களா?

google news
Continue Reading

More in Cinema History

To Top