Connect with us
simbu

Cinema News

ஏ.ஆர்.ரகுமானும் கவுதம் மேனனும் செஞ்ச வேலை!…வெந்து தணிந்தது காடு என்ன ஆகுமோ?!…

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானும், கவுதம் மேனனும் செய்த வேலை இப்படத்தின் அமெரிக்காவில் ஓவர்சீஸ் (வெளிநாட்டில் ரிலீஸ் செய்வது) வினியோகஸ்தரை அப்செட் ஆக்கியுள்ளதாம். வெளிநாட்டில் ரிலீஸ் ஆகும் ஒரு படத்தின் கண்டெண்ட்டை சரியான நேரத்தில் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அங்கு ரிலீஸுக்கு தயார் செய்வார்கள்.

ஆனால், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அதிக காலம் எடுத்துக்கொண்டதாலும், கவுதம் மேனன் இப்படத்தை எடிட் செய்து முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதாலும் அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய சரியான நேரத்தில் கண்டெண்ட் கொடுக்கவில்லையாம்.

vendhu

இப்படத்தை 208 தியேட்டர்கள் பிரீமியர் ரிலீஸுக்கு திட்டமிட்டிருந்தனராம். ஆனால், இவர்கள் செய்த வேலையில், 150 தியேட்டர்களில் இப்படத்தை கேன்சல் செய்துவிட்டு வெறும் 55 தியேட்டர்களில் மட்டுமே இப்படத்தை திரையிடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இது இப்படத்தை வாங்கிய ஓவர்சீஸ் வினியோகஸ்தருக்கு நஷ்டத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top