இவ்வளவு நடந்தும் கூலா வீடியோ போட்ட ரஹ்மான்!. எங்களுக்குதான் மறக்காதே சார்!... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படமே இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்து கொடுத்தது.

பின் இந்தியன், காதல் தேசம் போன்ற பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தார். அப்பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும் இவர் தனது பாடலுக்காக ஆஸ்கார் விருதினையும் தட்டி சென்றார்.எல்லா புகழும் இறைவனுக்கே எனும் வசனத்தோடு எந்த விஷயங்களையும் தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அனைத்து பட இயக்குனர்களும் விரும்பும் ஒரு முக்கிய இசையமைப்பாளராக மாறிவிட்டார். நிஜ வாழ்விலும் இவர் மிகசிறந்த மனிதர்.

இதையும் வாசிங்க:டைரக்‌ஷனில் களமிறங்க ரெடி! தனது முதல் ஹீரோவை பகிரங்கமாக அறிமுகப்படுத்திய ஜெயம் ரவி – இவரா?

இவர் சமீபத்தில் மறக்குமா நெஞ்சம் எனும் இசைகச்சேரியை நடத்தினார். அந்த கச்சேரியின் மூலம் தனது வாழ்வில் மறக்க முடியாத அளவிற்கு சம்பவம் அறங்கேறிவிட்டது. இந்நிகழ்ச்சியில் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல மக்கள் இவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் ஆனது.

அந்த நிகழ்ச்சியை நினைத்து வருந்திய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல திரைபிரபலங்களும் ஆதரவு கொடுத்தனர். மேலும் இந்த மோசடிக்கு காரணம் ரஹ்மான் இல்லை என்பது பின்னாளில் தெரிய வந்தது. மேலும் அவர்களில் பணத்தை திரும்ப கொடுக்க ரஜ்மான் பல முயற்சிகளையும் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையும் வாசிங்க:அந்த நேரத்தில் கார்த்திக்கு உதவிய நடிகர்!.. நன்றி மறக்காமல் நவரச நாயகன் செய்த அந்த சம்பவம்!…

இவ்வாறு ஒரு புறம் இருக்க தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நடந்த ஹைலைட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ரஹ்மான், வடிவேலு போன்ற பல முக்கிய பிரபலங்கள் பாடல்களை பாடியுள்ளனர்.

மேலும் இவர் அடுத்தடுத்து வெளிநாடுகளில் நடத்தபோகும் கான்செர்ட்டுகளுக்கான அடித்தளமோ என நெட்டிசன்கள் பலறும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறக்குமா நெஞ்சம் தான் எங்களுக்கு மறக்காத சம்பவமாகிவிட்டதே சார்.

இதோ அந்த வீடியோ:

https://x.com/arrahman/status/1705921484764402064?s=20

இதையும் வாசிங்க:எப்பா ஒரு முடிவுக்கு வாங்கப்பா!.. ரசிகர்களை குழப்பும் விடாமுயற்சி டீம்!.. பின்னணியில் இருப்பது யார்?…

 

Related Articles

Next Story