ராசியில்லாத இயக்குனரா ராஜமெளலி? தொடர்ந்து பிளாப் ஆகும் ஹீரோக்களின் படங்கள்....!
இப்படி ஒரு ஹீரோ இருக்கிறாரா என்று கூட தெரியாத நிலையில் இருக்கும் ஒரு ஹீரோ ராஜமெளலி படத்தில் நடித்தால் நிச்சயம் உலக புகழ் பெற்று விடுவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதற்கு உதாரணமாக பல ஹீரோக்கள் உள்ளனர்.
அந்த வகையில் நான் ஈ நடிகர் நானி தொடங்கி சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் வரை பல ஹீரோக்களை பிரபலமடைய செய்தவர் தான் இயக்குனர் ராஜமெளலி. இப்படி புகழ் பெற்ற இயக்குனராக வலம் வரும் ராஜமெளலியை ராசி இல்லாத இயக்குனர் என சிலர் கருதுகிறார்கள்.
காரணம் ராஜமெளலி படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் அதன் பின்னர் நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வியை சந்திப்பதுதான். அதன்படி நான் ஈ படம் மூலம் பிரபலமான நடிகர் நானிக்கு அந்த படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படி எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை.
அதேபோல் பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அப்படத்திற்கு பின் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இருபடங்களும் படுதோல்வியை சந்தித்தது. இதுதவிர சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம் சரணின் நடிப்பு தான் பலராலும் பாராட்டப்பட்டது.
அப்படி உள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின்னர் ராம் சரண் அவரது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் ராஜமெளலி படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு அந்த படத்தை தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறாது என்பது போன்ற பிம்பம் உருவாகியுள்ளது.