1000 கோடி பட்ஜெட்!. ஹாலிவுட் பட ஹீரோயின்!.. மகேஷ்பாபு படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் ராஜமவுலி..

Rajamouli: பாகுபலி படத்திற்கு பின் இந்திய அளவில் பெரிய இயக்குனராக மாறிவிட்டார் ராஜமவுலி. பாகுபலி இடம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்கு பின் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. பாகுபலி படம் போலவே ஆர்.ஆர்.ஆர் படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று பல நூறு கோடிகளை வசூல் செய்தது.
இதையும் படிங்க: கோட் படத்துல விஜய்க்கு இப்படி ஆகிடும்!.. வெளியான போட்டோ!.. ஷாக்கான தளபதி ஃபேன்ஸ்!…
எனவே, ராஜமவுலி பெரிய இயக்குனராக பிரபலமானர். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மகதீரா, ஈ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் அவரை வேறலெவலுக்கு கொண்டு போனது.
இவரின் இயக்கத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களின் முன்னணி நடிகர்களே ஆசைப்பட்டனர். ராஜமவுலி கேட்டால் ரஜினியே கால்ஷீட் கொடுப்பார் என்கிற நிலையும் உருவானது. தெலுங்கில் சிரஞ்சீவி முதல் பல நடிகர்களும் ராஜமவுலிக்காக காத்திருந்தனர்.
இதையும் படிங்க: ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…
இந்நிலையில்தான், மகேஷ்பாபுதான் தனது அடுத்த படத்தின் ஹீரோ என ராஜமவுலி முடிவெடுத்தார். இந்த படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் 2ம் வாரம் துவங்கவுள்ளது. இப்போது இந்த படத்தில் செஸ்லா எலிசபெத் இஸ்லான் என்கிற அமெரிக்க நடிகை இணைந்திருக்கிறார்.
ஏற்கனவே பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஒலிவியா மோரிஸ் எனும் அமெரிக்க நடிகை நடித்திருந்தார். இப்போது இந்தோனோஷியா நாட்டை சேர்ந்த அமெரிக்கா நடிகை செஸ்லா எலிசபெத் இஸ்லானை களம் இறக்கியிருக்கிறார் ராஜமவுலி.