More
Categories: Cinema News latest news

விரைவில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் – தேதி குறித்த இயக்குனர் ராஜமவுலி….

பாகுபலி படத்திற்கு பின் ஆர்.ஆர்.ஆர். என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்த திரைப்படம் அக்டோபர் 13ம் தேதி உலகமெங்கும் வெளியாவதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் அது தள்ளிப்போடப்பட்டது.

Advertising
Advertising

பாகுபலியை போலவே பல கோடி செலவில் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் சுதந்திரத்திற்காக வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடிய 2 நண்பர்களின் கதையாகும்.

இந்நிலையில், இப்படத்தை 2022 ஜனவரி 8ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக்க செய்திகள் கசிந்துள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையை இப்படம் குறி வைத்துள்ளது.

ஏற்கனவே, அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் வ்லிமையோடு மோதவுள்ளது. அதே நேரம், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பொங்கலுக்கு வெளியானால் ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா

Recent Posts