Categories: latest news

இது எதுக்குடா வம்பு? நைசாக நழுவிய ரஜினி.. எல்லா களத்துலயும் கிங்னு நிரூபிச்ச விஜய்

Rajini Vijay: ஒரு நேரத்தில் விஜய் ரஜினி என கடுமையான போட்டி நடந்து வந்தது. காக்கா கழுகு கதையை மாறி மாறி இருவரும் மேடைகளில் பேசி ரசிகர்களிடையே ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு லால் சலாம் விழா மேடையில்தான் ரஜினி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். விஜயை சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன் என்றும் என் கண்முன் வளர்ந்த பையன் விஜய் என்றும் ரஜினி கூறி சமாதானப்படுத்தினார்.

விஜய் ரஜினியை விட அவர்கள் ரசிகர்கள்தான் சமூக வலைதளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர். ஆனால் இப்போது அந்த சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. விஜய் அரசியலில் ஆர்வம் காட்டுவதால் அதுவும் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்றும் அறிவித்துவிட்டதாலும் அந்த சண்டை இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனா? சூர்யாவா?!.. விஜயின் இடத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் நடிகர்கள்!..

இந்த நிலையில் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்து விட்டது. எப்படியும் படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் நோக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையில் படத்தில் நான்கு பாடல்கள் இருப்பதால் படத்தின் முதல் சிங்கிளை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் விஜயின் பிறந்த நாளான ஜுன் 22 ஆம் தேதி கோட் படத்தின் டீஸரையும் வெளியிட இருக்கிறார்களாம். இதில் ரஜினி171 படத்தின் ஒரு க்ளிம்ப்ஸை அதே ஏப்ரல் 14 ஆம் தேதிதான் ரிலீஸ் செய்ய இருந்தார்களாம். அந்த தேதியில் கோட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருப்பதால் இது சரி வராது என கருதி லோகேஷ் ஏப்ரல் 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க:இளையராஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? வெடித்த பிரபலம்…

ஆனால் கோட் படத்தோடு விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி படம் மோத இருக்கிறது. அதே ஏப்ரல் 14 ஆம் தேதிதான் எல்.ஐ.சி படத்தின் சிங்கிளும் வெளியாகிறதாம். தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தைரியத்தோடு விக்னேஷ் சிவன் சிங்கிளை ரிலீஸ் செய்ய இருக்கிறாராம்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago