அந்த கேங்ஸ்டர் படத்தின் தொடர்ச்சிதான் தலைவர் 171?.. பக்காவா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்!..
Rajini 171: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த ஜெயிலர் திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவு பெரிய வெற்றியை பெற்றது.
அந்தப் படத்திற்கு பிறகு ஜெய்பீம் இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ராமாநாதபுரம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. இப்போது பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: இதுக்காகவா அந்த படத்துல நடிக்கல? சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண விக்ரம்
ரஜினி 170 படத்தில் ரஜினியுடன் பகத்பாசில், மஞ்சு வாரியார், ராணா, அமிதாப் பச்சன் போன்ற முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு வலுவான சமூக கருத்தை உள்ளடக்கிய கதையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி 170 படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைகிறார் ரஜினி. அந்தப் படத்தின் மீது இப்பொழுது இருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்த மாத இறுதிக்குள் ரஜினி 171 படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் முடிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: ரஜினி பக்கத்துல இருக்க வேணாம்!.. ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விஜய்!.. அப்ப அது உண்மைதானா?..
அடுத்தவருடம் ரஜினி 171 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் மம்மூட்டி நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகின. அதைப் பற்றி மம்மூட்டி சமீபத்தில் தெரிவித்த தகவல் என்னவெனில்,
ரஜினி 171 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களாமே? என்று கேட்டதற்கு அப்படி யாரும் என்னை அணுகவில்லை என்றும் இனிமேல் அந்த வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்பது மாதிரி பதில் கூறியிருந்தார். மேலும் கமலுக்கு எப்படி விக்ரம் படத்தை கொடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரோ அதே டெக்னிக்கை ரஜினிக்கும் லோகேஷ் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து பாதியிலேயே விடப்பட்ட திரைப்படத்தில் நடித்த சிவாஜி! அட இதெல்லாம் சின்னவர் நடித்த படமா?
அதாவது ரஜினி மம்மூட்டி நடிப்பில் பெரிய கேங்ஸ்டர் படமாக வெளியான தளபதி படத்தின் தொடர்ச்சியாக கூட ரஜினி 171 படம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆலோசனைகள் தான் தற்போது நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.