என்னய்யா சொல்றீங்க? ‘ரஜினி171’ அவருக்கு சொல்லப்பட்ட கதையா? நட்புனா என்னனு காட்டிட்டாரே

rajini
Actor rajiini: கோலிவுட்டில் அடுத்த சுடசுட செய்தியாக சூடுபிடித்திருப்பது ரஜினி , லோகேஷ் கூட்டணியில் அமைய இருக்கும் ரஜினி 171 திரைப்படம் தான். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஜெய்லர் படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி இணையும் திரைப்படமாக இந்த தலைவர்171 படம் அமைகிறது.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை தயாரிப்பதில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எளிதாக தட்டிச் சென்றது. படத்திற்கு அதே அனிருத்தான் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட் கார்ட் நடிகரை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!
மேலும் ரஜினிக்கு இந்தப் படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. லியோ 1000 கோடி என்றால் இந்தப் படம் 1001 கோடியாவது எடுக்க வேண்டும் என ரஜினி தீவிரமாக இருக்கிறார். கமலுக்கு எப்படி ஒரு விக்ரமோ அதே போல ரஜினியின் கெரியரில் லோகேஷ் இயக்கப் போகும் இந்தப் படம் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்க வேண்டும் என ரஜினியும் விரும்புவார்.
அதே சமயம் ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள். இந்த நிலையில் ரஜினி171 படத்தின் கதை பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகின்றது. அதாவது ரஜினி 171 படத்தின் கதையை முதலில் லோகேஷ் கமலிடம் சொன்னதாகவும் ஆனால் கமல் ‘இது ரஜினிக்கு சரியாக இருக்கும். அதனால் அவரிடம் போய் சொல்லுங்கள்’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: இப்படியொரு காமெடி வில்லனை பார்த்திருக்கவே மாட்டீங்க!.. மாஸ் காட்டியதா மார்க் ஆண்டனி?.. விமர்சனம் இதோ!..
இதை பற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவிடம் கேட்டதற்கு ‘இதுவும் ஒருவிதத்தில் உண்மையாகக் கூட இருக்கலாம். பொதுவாகவே கமல் கதை கேட்கும் போது தனக்கு சரியா வருமா என்பதை விட இந்த ஹீரோக்கு சரியா வரும் என்று யோசிப்பவர். அதனால் இதை கமல் சொல்லியிருப்பார். மேலும் விக்ரம் 3க்காக லோகேஷ் கமலிடம் கதை சொல்லப் போய் அந்த நேரத்தில் கமல் தட்டிவிட்ட கதைதான் ரஜினி 171’ என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.