Mark Antony Review: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறது.
இந்த ஆண்டின் சிறந்த கமர்ஷியல் என்டர்டெயினர் திரைப்படமாக மாற அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: முதல் பாதி மரண மொக்கை!.. எஸ்.ஜே. சூர்யா இல்லைன்னா சேகரு செத்துருப்பான்.. மார்க் ஆண்டனி எப்படி இருக்கு?
மார்க் விஷால் தனது அம்மாவை கொன்றது தனது அப்பா ஆண்டனி தான் என்றும் தன் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை பழி வாங்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில் வாடிக் கொண்டிருக்கிறான்.
இன்னொரு பக்கம் 20 வருடங்களுக்கு முன்பாக விஞ்ஞானி சிரஞ்சிவியாக வரும் செல்வராகவன் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் கண்டு பிடிக்கும் டைம் மெஷின் டெலிபோனை பயன்படுத்தி தனது வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மாற்ற முயற்சித்து மரணிக்கிறார்.
இதையும் படிங்க: ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..
அப்படியொரு வில்லங்கமான டைம் மெஷின் டெலிபோன் மார்க் விஷாலிடம் கிடைக்க, கேங்ஸ்டராக இருந்த தனது அப்பா ஆண்டனியை பழிவாங்க விஷால் அந்த கால பயணத்தை மேற்கொள்ள இந்த கதையில் எஸ்.ஜே. சூர்யா என்ன மாதிரியான வில்லனாக வருகிறார். எத்தனை விதமான கெட்டப்புகள் எல்லாமே ஏன் என்கிற பல கேள்விகளுக்கு எந்தவொரு இடியாப்ப சிக்கலும் இல்லாமல் திரைக்கதையில் பக்காவான படத்தை கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் ரேஞ்சே வேற மாதிரி மாறும் என விஷால் மேடையில் சொல்லும் போதெல்லாம் பஹீரா எடுத்து பதற விட்டவர் தானே என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், பாராட்டுக்களை அள்ளி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதையும் படிங்க: போதாத காலம்! ஒன்னுமில்லாத நேரத்திலும் ஆசை விட்டபாடில்லை – எம்ஜிஆரை தக்க சமயத்தில் மீட்டெடுத்த பிரபலம்
ஆனால், ஜெயிலர் திரைப்படம் போல கதைக்குள் போவதற்காக ஆரம்பத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் இழுத்தடித்து நகர்த்தியது தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும் விதமாக உள்ளது. அதிலும், அப்பா – மகன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் அந்த பேருந்தில் சில்க்குடன் செய்யும் சில்மிஷம் என வேற லெவல் என்டர்டெயின்மென்ட் படமாக மாறியுள்ளது மார்க் ஆண்டனி.
மார்க் ஆண்டனி – பக்கா மாஸ்!
ரேட்டிங்: 3.75