தமிழ் சினிமாவில் எப்போதும் இருதுருவ விளையாட்டு அந்த காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி என்ற இரு துருவங்கள் இருந்தனர். அவர்களை தொடர்ந்து ரஜினி – கமல் வந்தனர். அவர்களை வைத்துதான் சினிமா வியாபாரம் இருந்தது. ரஜினி படம் வசூல் அளவிற்கு தமிழ் திரைப்படம் வசூல் இல்லை என்றாலும், ரஜினிக்கு போட்டி என்றால் அது கமல்ஹாசன் தான் என்ற நிலை தற்போதும் இருந்து வருகிறது.
அடுத்ததாக தற்போதைய காலகட்டத்தில் விஜய் மற்றும் அஜீத். ஆரம்ப காலகட்டங்களில் விஜய் மற்றும் அஜீத் தங்கள் படங்களில், எதிரெதிர் போட்டியாளர்களை தாக்கும் வசனம் இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். விஜய் படத்தில் அவர், ரவுடிகளை பார்த்து ‘உன் தல வால் எல்லாத்தையும் கூட்டிக்கொண்டு வா’ என்று மிரட்டுவது போல காட்சிகள் இருக்கும்.
அதேபோல அஜித் படத்தில் இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்பதுபோல பாடல்களும் இருக்கும். இது வளர்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அஜித் ஒரு பேட்டியில் கூட எல்லோரும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர். அதே போல தான் நானும் ஆசைப்படுகிறேன். என்று வெளிப்படையாகவே கூறியிருப்பார்.
இப்படி அஜித் வெளிப்படையாக பேசுவது பல சமயங்களில் தவறாக முடிந்துவிடுகிறது. இதன்காரணமாக ரஜினிகாந்த் ஒரு முறை அஜித்தை வரவழைத்து, நீங்கள் மனதில் பட்டதை பேசுகிறீர்கள். ஆனால் அது வெளியில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆதலால் பத்திரிகையாளரிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள். என்று அறிவுரை கூறியுள்ளாராம்.
இதையும் படியுங்களேன் – தமிழகத்தில் தளபதியை ஓரம்கட்டி வரும் கே.ஜி.எப்-2.! வெளியான உண்மை விவரங்கள்.!
அதன் பின்னர்தான் பத்திரிக்கையாளர்களை முற்றிலுமாக ஒதுக்கி விட்டாராம் அஜித். விஜயும் அதே போல தான் ஒரு முறை ஓர் பத்திரிகையில் தான் கூறிய கருத்து தவறுதலாக பதிய பட்டதன் காரணமாக, இனி பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதில்லை என முடிவுக்கு வந்து, கடந்த 10 வருடமாக இதை கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…