தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.. அதாவது இப்போதுள்ள எல்லா நடிகர்களுக்கும் சீனியர் இவர். 74 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். ஜெய்லர் 2 எனும் சூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை நம்பர் ஒன் இடம் என்பது ரஜினியிடமே இருக்கிறது. ஆனால் அவரின் சில படங்கள் வியாபாரரீதியாக சரியாக போகாதாலும், ஒரு பக்கம் விஜயின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற்றதாலும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என சிலர் பேச துவங்கினார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போட்டியையும். மோதலையும் உருவாக்கியது.
ரஜினி படங்களை விட விஜய் படங்கள் அதிக வசூல் செய்கிறது.. ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் எனவே அவர்தான் நம்பர் ஒன் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்களும் அவர்களோடு சண்டை போட்டனர். இது இப்போது வரை நிற்கவில்லை.. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்ன போது விஜயைத்தான் காக்கா என சொல்லுகிறார் என விஜய் ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதன்பின் அவர்களின் மொத்த கோபமும் ரஜினி பக்கம் திரும்பியது. ரஜினி படங்கள் வெளியாகும் போதெல்லாம் அந்த படங்களுக்கு எதிராக, கடுமையாக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பத் துவங்கினர். மேலும், ரஜினியை மிகவும் மோசமாகவும் விமர்சிக்க துவங்கினார்கள்.
ஆனால் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்து விட்டார். எனவே இனிமேல் சினிமாவில் விஜய் – ரஜினி போட்டி இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக 25 வருடங்களாக சொல்லி வந்தார்.. பல பில்டப் எல்லாம் கொடுத்து பின்னர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு என்னால் வர முடியாது என சொல்லி ஒதுங்கிவிட்டார்.
இப்போது அரசியலில் இருந்து அவர் விலகியே இருக்கிறார். ஆனால் விஜயோ காலதாமதம் செய்யாமல் அரசியலுக்கு வந்து விட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். இப்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இது அவரின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் முதல் விஜய் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. வருகிற 2026 தேர்தலை விஜய் குறி வைத்திருக்கிறார். அந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்தால் விஜய் அரசியலில் நீடிப்பார். இல்லையெனில் அவர் மீண்டும் சினிமாவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ‘ஒரு இயக்குனரு, ஒரு தயாரிப்பு நிர்வாகியும் ரஜினி விஜய் என இருவருக்குமே நெருக்கமானவர்கள். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அவர் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ரஜினி ஒரு அடிப்படையான விஷயத்தை விஜய் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். அதை செய்தால் மட்டுமே விஜய் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் நினைத்தார்.
இதை விஜய் செய்தாரா என யோசித்த ரஜினி அந்த இருவரையும் அழைத்து ‘நான் சொன்னதாக சொல்லி இதை விஜயை செய்ய சொல்லுங்கள்’ என சொன்னார். அவர்களும் விஜய்யிடம் அதை கூறினார்கள். அந்த அளவுக்கு விஜய் வெற்றி பெற வேண்டும் என ரஜினி ஆசைப்படுகிறார். ஆனால் இது புரியாமல் ரசிகர்கள் விஜயும் ரஜினியும் ஏதோ எதிரிகள் போல பாவித்து சண்டை போட்டு வருகிறார்கள்’ என அவர் கூறினார்.
