வளரும் நேரத்தில் ரஜினி கொடுத்த அறிவுரை!.. ஃபாலோ பண்ணி மார்க்கெட்டை பிடித்த சூர்யா...
Actor suriya: நடிகர் சிவக்குமாரின் மூத்தமகன் சூர்யா. சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்படவே இல்லை. கார்மண்ட்ஸ் தொழிலில் பெரிய அதிபர் ஆகவேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அது தொடர்பான ஒரு நிறுவனத்திலும் அவர் வேலை செய்து வந்தார். முதலில் அவரை சினிமாவுக்கு அழைத்தது அவரின் பக்கத்து வீட்டில் இருந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான். ஆனால், சூர்யா முடியாது என சொல்லிவிட்டார்.
ஏனெனில், அழகாக இருக்கும் பலரும் சினிமாவில் முயற்சி செய்யும்போது நம் முகத்துக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என அவர் நினைத்தார். அதோடு, நடிப்பு நமக்கு சுத்தமாக வராது என நினைத்தார் சூர்யா. அப்போது அவரின் பெயர் சூர்யா இல்லை. சரவணன் என்பதுதான் அவரின் நிஜப்பெயர். கார்மெண்ட்ஸ் தொழிலில் சாதிக்க வேண்டும் என நினைத்த சூர்யாவுக்கு பின்னால்தான் புரிந்தது அதில் பெரிய புலி, சிங்கம் எல்லாம் இருக்கிறது என்று.
இதையும் படிங்க: வடிவேலுவுக்கு பாட்டா? எழுத முடியாதுனு சொன்ன வைரமுத்து… அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்
எனவே, கலக்கத்துடன் இருந்தபோதுதான் இயக்குனர் வசந்த் அவரின் வீட்டுக்கு வந்தார். ‘நேருக்கு நேர் என்கிற ஒரு படம் எடுத்து வருகிறேன். அதில் நீ நடிக்க வேண்டும்’ என கேட்கிறார். ஒரு வாரம் நேரம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன் என சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு செல்கிறார் சூர்யா. செல்லும்போதே ‘நாம் ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என அவருக்கு தோன்றியது. அலுவலகத்தை நெருங்கியபோது ‘சினிமாவில் நடித்துவிடுவது’ என்கிற முடிவையும் அவர் எடுத்திருந்தார்.
அவரின் அலுவலக நண்பர்களிடம் ‘நான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்’ என அவர் சொன்னபோது அவர்கள் சிரித்தார்கள். ’நீ சினிமாவில் நடிக்கபோறியா.. உன்னால் நடிக்க முடியாது’ என சொல்ல ‘ஏன் என்னால நடிக்க முடியாது. நடிச்சி காட்டுறேன்’ என சவாலும் விட்டார். அப்படித்தான் நேருக்கு நேர் படத்தில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இல்லையா? அட இது என்னப்பா புது கதை…
நடிக்க முடிவெடுத்தாரே தவிர நடிப்பு வரவில்லை. இதனால் படப்பிடிப்பில் அவமானங்களையும் சந்தித்தார். காக்க காக்க, நந்தா, பிதாமகன் என படங்கள் கிடைத்து தன்னை மெருக்கேற்றி கொண்டார். இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக சூர்யா இருக்கிறார். சூர்யா வளர்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு ரஜினி ஒரு அறிவுரை சொன்னார். நீங்க ஒரு ஸ்டார் மட்டுமில்ல. ஆக்டரும் கூட.
இன்னும் சரியா சொல்லனும்னா ஆக்டராக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஸ்டார். ரசிகர்கள் உங்ககிட்ட நிறைய எதிர்பார்ப்பார்கள். அதனால் ஒரு படத்தை நடிக்க ஒப்புக்கொள்ளும்போது அது எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமையணும்னு எதிர்பார்க்குறீங்களோ, அதேபோல், அந்த படத்தில் உங்களுக்கு நடிப்பதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கு என்பதையும் யோசித்து படங்களை ஒப்புக்கொள்ளுங்கள்’ என சொல்லி இருக்கிறார். ரஜினி சார் அப்போது சொன்ன அந்த அறிவுரையைத்தான் பின்பற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறேன்’ என சூர்யாவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.