எனக்கு 70 உனக்கு 80.. ‘வேட்டையன்’ செட்டில் இருந்து படுமாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்

ami
Rajini Amitab: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்து என்றுமே நான்தான் சூப்பர் ஸ்டார் என்று வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதேபோல் பாலிவுட்டிலும் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் அமிதாபச்சன்.
இருவருமே சினிமாவையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இன்றுவரை இருந்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.

rajini
இதையும் படிங்க: ரீரிலீஸ் ஆன தீனா 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?!.. உங்களுக்கு இது ஓவரா இல்லையா?!…
த ச ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, மஞ்சு வாரியார், அமிதாப்பச்சன், பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் வேட்டையன். ஞானவேல் படம் என்றாலே ஒரு சமூக அக்கறையுள்ள கதையாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கதையில் தான் ரஜினி இப்போது இந்த படத்தில் நடித்து வருகிறார் .
இன்னும் 20 சதவீத படப்பிடிப்புகள் எஞ்சி இருக்கும் நிலையில் நேற்று தான் ரஜினி படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று வேட்டையன் படப்பிடிப்பிலிருந்து ரஜினியும் அமிதா பச்சனும் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இருவருமே பார்ப்பதற்கு படு மாஸாக இருக்கின்றனர். ரஜினிக்கு 73 வயதாகிறது. அதே சமயம் அமிதாப்பச்சனுக்கு 81 வயதாகிறது. ஆனால் வயதையும் தாண்டி அவர்கள் இருவருக்கும் இருக்கும் அந்த ஸ்டைல் இன்னும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. அதை பார்த்த ரசிகர்கள் பிரமித்து வருகின்றனர்.

rajini
இதையும் படிங்க: ஹாய் செல்லம்! இந்த வசனத்துக்கு பின்னாடி இவ்ளோ சோகக் கதையா? ‘கில்லி’ பட வசனகர்த்தா பகிர்ந்த சீக்ரெட்