Cinema News
ரஜினி சொன்னாருங்கிறதுக்காக நடிக்க முடியாது! நல்லதுக்கு காலம் இல்லப்பா – வாய்ப்பு கொடுத்தது தப்பா?
Actor Rajini: சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.அப்படியே கிடைத்தாலும் அதை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களால் சினிமாவில் நிலைத்து நிற்கவும் முடியாது. அப்படி கிடைத்த வாய்ப்பை தன் ஈகோவால் ஒரு நடிகர் இழக்க நேரிட்டு பின் பயன்படுத்திக் கொண்டார்.
அவர் வேறு யாருமில்லை. நடிகர் விஜயபாபு. படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த நடிகர்தான் அவர். அவரும் ரஜினியும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார் விஜயபாபு.
இதையும் படிங்க: எல்லோரும் ஏன் விஜயகாந்தை கொண்டாடுகிறார்கள்?.. அப்படி அவர் என்னதான் செய்தார்?!. வாங்க பார்ப்போம்!..
ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் வந்தும் இரண்டு படங்களுக்கு பிறகு வாய்ப்புகள் இல்லாமல் தவித்திருக்கிறார். வீட்டு வாடகை கூட கட்ட முடியாத சூழ்நிலையாம். அப்போதுதான் படிக்காதவன் படத்தில் அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.
இயக்குனர் ராஜசேகர் ரஜினியிடம் தம்பி கேரக்டருக்கு விஜயபாபுவை சொன்னதும் அந்த ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தோமே அந்த விஜயபாபுவா என கேட்டு அவரையே ஓகே பண்ணிடலாம் என சொல்லியிருக்கிறார். மேலும் அவரை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: 4 படங்கள் தொடர் தோல்வி!. கடவுள் போல வந்து விஜயை தூக்கிவிட்ட இயக்குனர்…
ஏற்கனவே ராஜசேகரும் விஜயபாபுவும் ரொம்ப க்ளோஸாம். விஜயபாபுவிடம் ராஜசேகர் உன்னை ரஜினி மிகவும் கேட்டாருப்பா அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.
உடனே விஜயபாபு ரஜினி ஓகே சொன்னாருங்கிறதுக்காக எல்லாம் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார். இதை பற்றி அந்த பேட்டியில் விஜயபாபு கூறும் போது ‘இது எதுக்கு அப்படி சொன்னேன் என தெரியவில்லை. ரஜினியை பிடிக்காது என்றெல்லாம் இல்லை. அவர் என் நண்பர். இருந்தாலும் அந்த சூழ்நிலையில் அப்படி பேசிவிட்டேன்’ என கூறினார்,
இதையும் படிங்க: வெறியேத்துறதே உனக்கு வேலையா போச்சி!.. சேலையில் மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!..
உடனே ராஜசேகர் கோபப்பட்டாராம். அதன் பிறகு ரஜினியுடன் விஜயபாபுவுக்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய அங்கு ரஜினி மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் விஜயபாபுவை நடத்தியிருக்கிறார். உண்மையிலேயே ரஜினி மிகவும் கிரேட் என அந்த பேட்டியில் விஜயபாபு கூறினார்.