Connect with us
vijayakanthh

Cinema History

எல்லோரும் ஏன் விஜயகாந்தை கொண்டாடுகிறார்கள்?.. அப்படி அவர் என்னதான் செய்தார்?!. வாங்க பார்ப்போம்!..

Vijayakanth: ரஜினி, கமல் படங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்து அசத்தியவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்று ரசிகர்கள் அவரை செல்லமாக அழைத்து வருகின்றனர். இவரிடம் அப்படி என்ன சிறப்பு என்று பலர் கேட்கலாம். கேப்டன் விஜயகாந்த்தை பொறுத்த வரை பல இடங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அது பற்றி பார்க்கலாமா?…

கமல், ரஜினி என்ற பெரிய ஜாம்பவான்களுக்கு கூட 100வது படம் வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்துக்கு 100வது படமான கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றியைத் தந்தது. திரையுலகினர் பலரும் விஜயகாந்தைப் பற்றி சொல்லும்போது ரொம்பவே சிலாகித்துப் பேசுவார்களாம். விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி. மதுரையில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். எளிமையான தோற்றம், கருப்பு நிறம் தான் விஜயகாந்தின் அடையாளங்கள். இப்படி இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்தவர்.

இதையும் படிங்க: என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…

விஜயகாந்துக்கு முதன் முதலாக வெற்றி பெற்ற படம் தூரத்து இடி முழக்கம். அதுவரைக்கும் அவர் சந்தித்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வேறு யாராவது இவ்வளவு விமர்சனம் வந்தால் சினிமா துறையில் இருந்தே விலகி இருப்பார்கள்.

விஜயகாந்த் தான் ஜெயித்ததோடு நிற்காமல் தன்னோடு இணைந்து போராடிய அத்தனை பேர்களுக்கும் மிகப்பெரிய உதவி செய்தார். தனது அலுவலகத்தையே சென்னைக்கு சினிமா கனவுகளுடன் வாய்ப்பு தேடி வந்த உதவி இயக்குனர்களுக்கு தங்கும் அறையாக மாற்றிக் கொடுத்தார்.

இதையும் படிங்க: ராவுத்தர் – விஜயகாந்த் பிரிவு துவங்கி புள்ளி அதுதான்!.. கடைசிவரை சேராமல் போன சோகம்..

பலமுறை இவர் அங்கு தங்கும் உதவி இயக்குனர்களுடன் படுத்து தூங்கி விடுவார். பின்னர் காலையில் எழுந்து சூட்டிங் கிளம்பி செல்வாராம். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான உணவைக் கொடுத்து மெய்சிலிர்க்க வைத்தவர் கேப்டன்தான். அதுவரையிலும் ஒவ்வொரு பதவிக்கேற்ப உணவு வகைகளிலும் வித்தியாசம் இருந்து வந்தது. அதை ஒழித்து, சைவம், அசைவம் என்ற உணவானது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைக்க செய்தவர் இவர்தான்.

இன்று தமிழ்ப்பட உலகில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டு இருக்கும் பல இயக்குனர்களும் விஜயகாந்த் வீட்டில் சாப்பிட்டவர்கள் தான். நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டது அவரது மிகப்பெரிய சாதனை என்று இன்று வரை சொல்லலாம். இதற்காக மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினார். இதனால்தான் சினிமா கலைஞர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்தது விட்டார்.

இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top