1937ம் வருடம் முதல் 1965ம் வருடம் வரை தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் மத்திய அரசு கொண்டுவந்த ஹிந்தி திணிப்பை எதிர்த்து சாலைகளில் இறங்கி போராடினார்கள்.. அப்போது மத்திய அரசு படைகள் சுட்டதில் பலரும் உயிரிழந்தனர்.. குறிப்பாக பொள்ளாச்சியில் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அப்போதைய தமிழக அரசு மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பலி எண்ணிக்கையை காட்டியது.
இதையெல்லாம் அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் பராசக்தி.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜனநாயகனுக்கு போட்டியாக இந்த படம் வருகிறது என அறிவிப்பு வெளியானதும் விஜய் ரசிகர்கள் கோபமடைந்து சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள். மேலும் படம் வெளியான பின் இந்த படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள்.
ஒருபக்கம் ஜனநாயகன் பட சென்சாரில் சிக்கி வெளியாகவில்லை என்பதால் அவர்களின் மொத்த கோபமும் பராசக்தி படம் மீது திரும்பியது. எனவே இந்த படத்திற்கு எதிராக களமிறங்கி வேலை செய்தார்கள். ஆனாலும் இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் 50 கோடி வசூல் செய்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்னையில் இன்று காலை இந்த படத்தின் வெற்றி விழாவும் நடந்தது. அதில் பேசிய சிவகார்த்திகேயன் ‘படத்தை பார்த்துவிட்டு உலகநாயகன் கமல் சார் என்னிடம் 5 நிமிடங்கள் பேசினார்.. அமரன் படத்திற்கு கூட இரண்டு நிமிடம் பேசிய கமல் சார் இந்த படம் பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்கள் பேசினார்.
அதேபோல் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை ஃபோனில் தொடர்பு கொண்டு என் நடிப்பை பாராட்டி பேசினார். மேலும், இது ஒரு தைரியமான முயற்சி.. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி நன்றாக இருந்தது’ என பாராட்டி பேசியிருந்தார். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது’ என சொல்லியிருக்கிறார்.

