தேடி தேடி உதவி செஞ்சாலும் நீங்களாம் அதுக்கு லாயிக்கே இல்ல! விஜய் , ரஜினியை கடுமையா சாடும் பிரபலம்
Actor vijay and rajini: தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போட்டி மாறி விஜய் ரஜினி என்றாகி விட்டது. வசூலிலும் சரி பிசினஸிலும் சரி இருவருக்குமிடையில் தான் ஒரு தரமான போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம்ம் ஜெய்லர் வெற்றியால் குதூகளிப்பில் இருக்கும் ரஜினி அதே புத்துணர்ச்சியுடன் அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார்.
இந்தப் பக்கம் விஜய் லியோவின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக தளபதி 68 படத்திற்கான வேலைகளிலும் விஜய் பிஸியாக இருக்கிறார். ஜெய்லர் பட வசூலை லியோ படம் முறியடிக்குமா என்ற ஒரு போட்டி இப்போதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது.அதற்காக என்ன வேலைகள் பண்ண வேண்டுமோ தயாரிப்பு தரப்பிலிருந்து செய்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: லியோ பாட்டுக்கே வேட்டு வச்ச சென்சார்… அப்போ படத்துக்கு? அதிர்ச்சியில் படக்குழு!
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயின் அரசியல் குறித்து கடுமையாக சாடியிருக்கிறார். அவரோடு நிறுத்தாமல் மொத்த நடிகர்களையும் சாடியிருக்கிறார். அதாவது நடிகர்கள் அரசியலில் வருவது என்பது ஒரு தவறான செயல் என்றும் அவர்களுக்கு நாடாளும் உரிமை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் சமூகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை பற்றி எந்த நடிகனாவது வாய் திறக்கிறார்களா? ஏன் சமீபத்தில் கூட சனாதனம் குறித்த உதயநிதி கருத்துக்கு ஒரு அரசியல் பிரபலம் கடுமையாக அவரை சாடியிருந்தார். உதயநிதிக்கு ஆதரவாக எந்த நடிகராவது பேசினார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜவானில் ஷாருக்கான் செஞ்ச ஒரே தப்பு!.. செஞ்சிவிட்ட விஜய் சேதுபதி!.. எல்லாம் அட்லிய சொல்லணும்!..
மேலும் விஜயை பொறுத்தவரைக்கும் சினிமாவில் கடும் உழைப்பை போட்டு வந்தவர்தான் என்றும் அதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை என்றும் ஆனால் அரசியலுக்கு வர தகுதி இல்லை என்றும் கூறினார். விஜயை மட்டும் கூறாமல் அரசியலுக்கு வரத் துடிக்கும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கும் எந்த தகுதியும் இல்லை என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.