Cinema History
கமலின் படத்தை பார்த்துவிட்டு நைட் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு போன ரஜினி!.. நடந்தது இதுதான்!…
ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கமல்தான் ஹீரோவாக நடித்திருந்தார். ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக இருந்தார். ரஜினி வியந்து பார்க்கும் நடிகராகத்தான் கமல் அப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். துவக்கத்தில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினி ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார்.
கமல்ஹாசன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் ரஜினியோ மசாலா படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராக மாறினார். 80 மற்றும் 90களில் ரஜினி – கமல் இடையே பெரிய போட்டியே இருந்தது. சினிமாவில்தான் போட்டியே தவிர நிஜவாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். ஒரு மேடையில் பேசிய கமல் ‘சினிமாவில் என்னையும், ரஜினியும் போல நல்ல நண்பர்கள் எவனும் கிடையாது’ என அடித்து சொன்னார்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் இவ்ளோ க்ளோஸாவா? ஜாலி பைக் ரைட்! நியூ லுக்கில் வைரலாகும் அஜித் புகைப்படம்..
கமல் நடிக்கும் படங்களின் விழாக்களில் ரஜினியும், ரஜினி பட விழாக்களில் கமலும் கலந்து கொள்வார்கள். அதில், எப்போதும் கமலை உயர்த்தியே ரஜினி பேசுவார். கமல்ஹாசனை போல நான் சிறந்த நடிகர் இல்லை என எல்லா மேடைகளிலும் பேசுவார் ரஜினி. அதுதான் ரஜினி. தன்னடக்கத்தின் மொத்த உருவம் அவர். பல மேடைகளில் அப்படி பேசியிருக்கிறார்.
அதேபோல், வித்தியாசமான முயற்சிகளில் கமல் நடித்த படங்களை பார்த்துவிட்டு முடிந்தால் நேரில் அல்லது தொலைப்பேசியில் என உடனே கமலை அழைத்து பாராட்டும் பழக்கம் கொண்டவர் ரஜினி. நாயகன் படத்தை பார்த்துவிட்டு கமலை தொலைப்பேசியில் அழைத்து ‘கமல் மூணாவது ரவுண்டுல இருக்கேன். ஆனா இந்த போதையை விட வேலு நாயக்கர் போதை அதிகமா இருக்கு’ என சொன்னார் ரஜினி. இதை பி.வாசு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை – ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படத்தில் அப்பு எனும் வேடத்தில் குள்ளமானவராக ஒரு வேடத்தில் கமல் நடித்திருப்பார். அப்போது அது மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதை கமல் எப்படி செய்தார்? என்பது இப்போது வரைக்கும் பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இதைப்பார்த்துதான் கலைஞர் கருணாநிதி கமலுக்கு ‘கலை ஞானி’ என்கிற பட்டத்தை கொடுத்தார்.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய ரஜினி ‘அபூர்வ சகோதர்கள் படம் பார்த்துவிட்டு அதிர்ந்து போனேன். இப்படி ஒருவரால் நடிக்க முடியுமா? என வியந்து போனேன். கமல் அதை எப்படி செய்தார் என யோசிக்கவே முடியவில்லை. ஏனெனில், இப்போது போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் அப்போது கிடையாது.
படத்தை பார்த்துவிட்டு கமலை உடனே பார்க்க வேண்டும் என்றேன் அப்போது இரவு 2 மணி. அவரின் மேனேஜேர் ‘இந்த நேரத்தில் பார்க்க வேண்டுமா?’ என கேட்டார். நான் ‘பார்த்தே ஆக வேண்டும்’ என்றேன். அவரின் வீட்டுக்கு சென்று கமலை பாராட்டிவிட்டுதான் வீட்டுக்கு போனேன். கமல் ஒரு மகா நடிகன்’ என ரஜினி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: என்னது ஒரே டேக்கில் எடுத்ததா? கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நடித்த கமல் – என்ன படம் தெரியுமா?