ஒரே நேரத்தில் ரஜினியுடன் மோதிய இரு சூப்பர் ஹீரோக்களின் படங்கள்...! தலைவர் என்ன செய்தார் தெரியுமா...?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஏன் தலைவராகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ஜெய், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உட்பட பலரும் நடிக்கின்றனர்.
படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு ஒரு விழா போல தான் காட்சி அளிக்கும். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர்களின் படங்கள் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட உற்சாகத்தை கொடுக்கும்.
இதையும் படிங்கள் : சூர்யா – சிறுத்தை சிவா எடுக்கும் பெரிய ரிஸ்க்…! அண்ணாத்த கதைக்கு முக்கியத்துவம் கொடுங்க…
மேலும் முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் வெளியிட யோசிப்பார்கள். அதையும் மீறி வெளியிட்டால் கலவரம் தான் மிச்சம். ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ரஜினி உச்சத்தில் இருக்கும் போதே டி.ராஜேந்திரன், நடிகர் ராஜ்கிரண் ஆகியோரும் ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
ரஜினியின் படமும் அவர்களின் படங்களும் ஒன்றாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனராம். இதை அறிந்த ரஜினி தனித்தனியாக இருவருக்கும் போனில் அழைப்பு விடுத்து என் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆகவே உங்கள் படத்தை ஒரு வாரம் கழித்து திரையிட அனுமதித்தால் நன்றாக இருக்கும் என பெருந்தன்மையோடு கேட்டாராம். இந்த சம்பவம் இப்போது அஜித், விஜய் காரியத்தில் ஒன்றியிருக்கிறது. அஜித், விஜய் இருவரின் படங்களும் பொங்கல் அன்று வெளிவர வாய்ப்பிருக்கிறதாம்.
இதையும் படிங்கள் : “எனக்கு சிம்பு தான் திருமணம் செய்ய சரியான ஆள்”.. கன்னக்குழி அழகியின் சீக்ரெட் ஆசை
இதையறிந்த விஜய் அவரது மேனேஜரை அழைத்து போனிகபூரிடமும், எச்.வினோத்திடம் உங்களுக்கு பழக்கம் இருக்கிறது. ஆகவே இதை பற்றி எல்லாம் பேசி விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்திருக்கிறாராம். ஆகவே அப்ப உள்ள நடிகர்கள் மனிதாபிமானத்தோடு இறங்கி சொல்கின்றனர். ஆனால் இப்ப உள்ள நடிகர்கள் இமேஜ் பார்க்கின்றனர் என்று வெளிவட்டாரத்தில் பேசி வருகின்றனர்.