இன்று தமிழ் திரையுலகில் ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த வேட்டையன் திரைப்படம் ஒரு சமூக கருத்தை மையப்படுத்தி மக்களுக்கு ஒருவித சமூக கருத்தை சொல்வதாக அமையும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன் ஜெய் பீம் என்ற ஒரு ஆழமான கருத்தை வலியுறுத்தி மக்களுக்காக அந்த படத்தை கொடுத்ததன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு ரஜினியுடன் வேட்டையன் திரைப்படத்தில் இணைந்திருப்பது இன்னும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி லோகேஷ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..
அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினியுடனான தனது அனுபவத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பேட்டியில் கூறினார். ரஜினிக்கு ஸ்டண்ட் சொல்லிக் கொடுக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் செய்வதை மிகவும் உற்றுநோக்கி கவனிப்பாராம் ரஜினி. அதன் பிறகு சைலன்டாக வந்து ஸ்டாண்ட் மாஸ்டரிடம் இது எப்படி செய்தீர்கள்? அது எப்படி பண்ண வேண்டும்? என்று மிகவும் சைலண்டாக வந்து கேட்டு தெரிந்து கொள்வாராம்.
சிவாஜி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் செட்டில் ஒரு ஹிந்தி கார பையன் ஒருவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரிடம் ரஜினி எப்பொழுதுமே வம்பு இழுத்துக் கொண்டு இருப்பாராம். ஒரு சமயம் ரஜினியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அந்தப் பையன் ஆசைப்பட்டதற்கு இணங்க ரஜினி உடனே கொஞ்சம் பொறு விக்கை கழட்டி வைத்து விட்டு வருகிறேன் என்று சொன்னாராம். அதற்கு அந்தப் பையன் விக்கை கழட்டுவதாக இருந்தால் உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனெனில் எங்க ஊர் பக்கம் நீங்கள் இப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என கூறினாராம்.
இதையும் படிங்க: பிரபாஸோட 500 கோடி பட்ஜெட் படத்துக்கு இப்படியொரு ஆப்பா?.. அந்த படத்தோட அட்டுக் காப்பின்னு சொல்றாங்க!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…