லோகேஷுக்கு போன் செய்த ரஜினி! லவுட் ஸ்பீக்கரில் போடச் சொல்லி தலைவர் சொன்ன விஷயம்

rajini
Rajini 171 : ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என்பதை அறிந்திருப்போம். அதுவும் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இப்படிப்பட்ட ஹிட்டை கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியம்தான்.
ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி இப்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் அவருடைய 170வது படத்தில் நடித்து வருகிறார். த.ச.ஞானவேலின் படங்கள் ஏதாவது ஒரு சமூக கருத்தை வலியுறுத்தியே இருக்கும்.
இதையும் படிங்க: அஜித் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான தகவல்
அந்த வகையில் அமைந்த படம்தான் ஜெய்பீம். ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் ஞானவேலுவுடன் ரஜினியை கூட்டணி அமைக்க வைத்தது. இந்த படமும் ஒரு நல்ல கருத்தை உள்ளடக்கிய படமாக அதுவும் பிரம்மாண்ட படமாக வரவிருப்பதாக படப்பிடிப்பிற்கு செல்லும் போது ரஜினி விமான நிலையத்தில் கூறினார்.
இந்தப் படத்தை அடுத்து ரஜினி அடுத்ததாக லோகேஷுடன் அவருடைய 171 வது படத்தில் இணைகிறார். கமலை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த போதே லோகேஷுடன் ரஜினி இணையவேண்டும் என விரும்பினார்.
இதையும் படிங்க: கன்ஃபார்மா 10 படம்தான்! லோகேஷ் முடிவுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியம் – இந்தளவு வேதனையா?
அதன் காரணமாக தனது 170வது படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்றும் அதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும் ரஜினி கூறியிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக 170வது படத்தில் ஞானவேல் நுழைந்தார்.
இந்த நிலையில் தான் 171வது படத்தை லோகேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் லோகேஷ் லியோ பட சூட்டிங்கில் இருக்கும் போது ரஜினி லோகேஷுக்கு போன் செய்தாராம்.
இதையும் படிங்க: அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..
போனை எடுத்த லோகேஷ் ரஜினி பேசுகிறார் என்று தெரிந்ததும் தன்னுடைய உதவி இயக்குனர்களை எல்லாம் ஒன்றுதிரண்டிக் கொண்டு அதை ரஜினியிடமும் தெரிவித்திருக்கிறார்.அதாவது என்னுடைய அசிஸ்டெண்டுகளும் உடன் இருக்கிறார்கள் என்று ரஜினியிடம் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு ரஜினி போனை லவுடு ஸ்பீக்கரில் போடச் சொல்லியிருக்கிறார். லோகேஷும் அவ்வாறே செய்தாராம். அதன் பின் ரஜினி ‘அடுத்தப் படத்தை அசத்தியிருலாம் கண்ணா’ என்று சொன்னாராம். அதன் விளைவாக ரஜினியும் லோகேஷும் இணையப் போகும் படம் பிரம்மாண்டமாக உருவாகும் என்று தெரிகிறது.