நீ என்ன வேணா பண்னு!.. இது மட்டும் மிஸ் ஆகக்கூடாது!. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி...

by சிவா |
lokesh
X

ஜெயிலர் பட ஹிட்டுக்கு பின் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார் ரஜினி. ஆனால், அது ஊத்திக்கொண்டது. அதன்பின், ஜெய்பீம் பட இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் பஹத் பாசில், அமிதாப்பச்சன், ராணா, ரித்திகா சிங், துஷரா விஜயன், மஞ்சு வாரியர் என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குனருடன் ரஜினி கூட்டணி அமைத்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

இதையும் படிங்க: ஒருவழியா ஆரம்பிச்சிட்டிங்களே… கோட் படத்தினை அவெஞ்சர் லெவலுக்கு ஸ்கெட்ச் போடும் வெங்கட் பிரபு!

கண்டிப்பாக இந்த படம் சமூகப்பிரச்சனைகளை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியானது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமாரி, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அபுதாபிக்கு ஓய்வெடுக்க சென்றிருக்கிறார் ரஜினி. ஜூன் மாதம் சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக அமைந்தது.

இதையும் படிங்க: ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!

இந்நிலையில், இப்படம் தொடர்பாக ரஜினி லோகேஷிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதாவது, ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி இந்த நாளில் படப்பிடிப்பு துவங்க வேண்டும் என சொல்லி இருக்கிறாராம். ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை உள்ளவர் ரஜினி.

எனவே, அந்த தேதியில் படப்பிடிப்பை துவங்கிவிட்டு அதன்பின் இடைவெளி விட்டு விட்டு உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது படப்பிடிப்பை நடத்துங்கள். ஆனால், நான் சொன்ன தேதியில் படப்பிடிப்பு துவங்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டாராம். எனவே, அதற்கான வேலையில் இப்போது லோகேஷ் ஈடுபட்டிருக்கிறார்.

Next Story