தானா கிடைச்சதும் போச்சு! வந்ததும் வீணாப்போச்சு! கார்த்தி விஷயத்தில் அக்கப்போரு பண்ணும் ரஜினி
தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக ரஜினியை தான் எல்லாரும் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். 80களில் ஆரம்பித்த தனது ஆட்டத்தை இன்று வரை சளைக்காமல் இளம் தலைமுறையோடு போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார் ரஜினி.
தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி லால் சலாம் படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெய் பீம் படம் இயக்குனர் த ச ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து நடிகர்களும் நடிக்க ஆசைப்படும் இயக்குனரான லோகேஷ் உடன் கை கோர்க்கிறார் ரஜினிகாந்த்.
இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம் என்றாலும் கார்த்தி விஷயத்தில் மிகவும் வருத்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதாவது கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய கைதி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு .அந்த படத்திற்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் 30 லட்சம் ரூபாயாம்.
ஆனால் இப்போது லோக்கேஷின் சம்பளம் கோடிக்கணக்கில் எகிறி உள்ளது .ஏதோ ஒரு காரணத்தினால் கைதி படத்தின் இரண்டாம் பாகம் தள்ளி போய்க்கொண்டே இருக்கின்றது. இதைப் பற்றி எஸ்ஆர் பிரபுவும் லோகேஷின் தற்போது உள்ள மார்க்கெட் நிலவரப்படி அவர் என்ன கேட்கிறாரோ அதை கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார் .இருந்தாலும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.
அதற்குக் காரணம் ஒரு விதத்தில் ரஜினியாக கூட இருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். ஏனெனில் எந்த இயக்குனர்களுக்கும் ஒரு பெரிய நடிகருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் ரஜினி லோகேஷிடம் உங்கள் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும் சும்மா இருப்பாரா? அதனால் கூட கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை தள்ளி வைத்துவிட்டு ரஜினியுடன் கூட்டணி வைத்திருப்பார் என கூறினார்.
இதே மாதிரி தான் சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி தானாம். பா ரஞ்சித் கதையை சொன்னதும் கார்த்திக்கு அந்த கதை மிகவும் பிடித்து போக களத்தில் இறந்த தயாராக இருந்திருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து பா ரஞ்சித்தை அலேக்கா தூக்கிட்டு போய்விட்டார் ரஜினி. அதன் மூலம் தயாரான படம் தான் கபாலி. இப்படி கார்த்தி விஷயத்தில் அவ்வப்போது மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றார் ரஜினி.
இதையும் படிங்க : நடிச்சி முடிச்சாதான் சோறு.. மிஸ்கினால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை!.