காலையில் ப்ரோபோஸ் செய்தவருடன் மாலையில் திருமணம் செய்து கொண்ட ரஜினி மகள்… அட சுவாரஸ்யமால இருக்கு..!

Published on: November 1, 2023
---Advertisement---

Rajini Daughter: கோலிவுட் பிரபலங்களின் காதல் கதையை கேட்டால் அதையே சினிமாவாக எடுக்கும் அளவுக்கு அத்தனை ஆச்சரியங்கள் நிறைந்து இருக்கும். அப்படி சினிமா நடிகை ஒருவரின் காதல் கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முக்கிய கேரக்டரில் நடித்து இப்போது அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை துளசி. இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் எண்ட்ரி கொடுத்தவர். பல படங்களில் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Also Read

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…

இதையடுத்து, 1982ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். இவரால் படத்தில் நிறைய பிரளயம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான நல்லவனுக்கு நல்லவனில் ரஜினியின் மகளாகவும், கார்த்திக்கின் காதலியாகவும் நடித்திருப்பார். 

இப்படி வெற்றிகரமாக இவர் திரை வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பிரபல கன்னட இயக்குனர் சிவமணி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இயக்குனருக்கு இவர் மீது காதல் கசிந்ததாம். 

ஒரு நாள் படப்பிடிப்பின் போது தன்னுடைய காதலை ஓபனாக கூறிவிட்டார் சிவமணி. இங்க தான் ட்விஸ்ட்டு இவருக்கும் அவர் மீது இருந்த காதலால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். பொறுக்காத ஜோடி அன்று மாலையே கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாம்.

இதையும் படிங்க: எட்டே படம்… கோடீஸ்வர அப்பா.. வெளியில் தெரியாத குடும்ப விவரம்… காணாமல் போன ஹீரோ..! ஆச்சரிய தகவல்..!

ஒரு சில வாரங்கள் கழித்து இருவரும் வீட்டில் சிக்க வேறு வழியில்லாமல் திருமணம் அவர்களே முறைப்படி செய்து வைத்தனராம். இதையடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். சமீபகாலமாக தான் மீண்டும் அம்மா ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.