இன்று வரை தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடாத ரஜினி!.. அட கொடுமையே!.. இதுதான் காரணமா!..

Published on: July 8, 2023
Rajinikanth
---Advertisement---

இதுவரை பிறந்த நாளை கொண்டாடாத ரஜினி ஏன்??.. எதற்காக??..

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினி காந்த் எப்பொழுதும் அவரது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவதில்லை காரணம் இதுதான்.

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தற்சமயம் வெளியாகி இணையங்களில் வைரலாகி வருகிறது. நிறைய தோல்வி படங்களை அடுத்தடுத்து கொடுத்த ரஜினிகாந்த்க்கு இந்த படமாவது வெற்றி படமாக அமையுமா என்று அனைவர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி
ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பாடல் தற்சமயம் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் நடிகை தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடிவிட்டு போயிருக்கிறார்.இந்த பாடல் அனைத்து இளைஞர்கள் மத்தியில் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க- பாவனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யோகிபாபு!.. 15 வருஷத்துக்கு முன்னயே ஒரு பிளாஷ்பேக்!..

ரஜினி
ரஜினி

இந்த நிலையில் எல்லா நடிகர்களும் நடிகைகளும் தனது பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக தனது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள், இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் இன்றளவும் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவதில்லை. பிறந்தநாள் வரும் சமயங்களில் எல்லாம் இமயமலை மற்றும் இதர சுற்றுப்பயணங்களில் தனது பிறந்த நாளை தவிர்த்து வருகிறார். இதன் மூலம் நிறைய ரசிகர்களும் ஏன்..?? எதற்காக..?? இப்படி ரஜினிகாந்த் அவர்கள் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து வருகிறார். என்று குழப்பம் அடைந்து வருகிறார்கள் இதற்கு காரணம் இதுதான்.

ரஜினி
ரஜினி

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.அந்த நேரத்தில் மூன்று ரஜினி ரசிகர்கள் ஒரு விபத்தில் உயிரிழந்தார்கள். இதனை அறிந்த ரஜினிகாந்த் மிகுந்த மனம் உடைந்து இனிமேல் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாகவே தனது பிறந்த நாளை இன்றளவும் தனது ரசிகர்களுடன் கொண்டாட மறுத்துவிட்டார்.

ரஜினி
ரஜினி

இதனை அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்கள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா..?? என்று ஆச்சரியப் பட்டு இருக்கிறார்கள்.மேலும் ரஜினி ஒரு இரக்கம் மிகுந்த ஒரு நடிகர் என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.

இதையும் படிங்க- தலைக்கணம் அதிகமாயிடுச்சா?!.. கொந்தளித்த பத்திரிக்கையாளர் !.. மன்னிப்பு கேட்ட சரத்குமார்!..

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.