மரண மாஸ் தலைவர்!.. ஜெயிச்சிட்டியே நெல்சா!.. ஜெயிலர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2023-08-10 06:18:32  )
jailer
X

Jailer Review: ரஜினிகாந்த படம் வெளியானேலே அது அவரின் ரசிகர்களுக்கு திருவிழா கோலம்தான். தியேட்டர்கள் களைகட்டும். டிக்கெட் விலை என்னவாக இருந்தாலும் கொடுத்து ரஜினி படத்தை பார்க்க இப்போதும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுதான் ரஜினியின் பலமும் கூட.

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என நினைத்து ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவரு அலப்பர!.. கூஸ்பம்ப்ஸ்.. படம் வேற மாறி.. வேற மாறி!.. ஜெயிலர் டிவிட்டர் விமர்சனம்…

ஜெயிலர் திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. வெளிநாடுகளிலும், கர்நாடகாவிலும் இப்படம் காலை 6 மணிக்கே ரிலீஸ் ஆனது. ஆனால், தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு வெளியானது. பெங்களூரில் இப்படத்தை பார்த்த கேரள ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

நெல்சனுக்கு இப்படம் சூப்பர் கம் பேக் எனவும், ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார்.. தலைவர் கொல மாஸ்.. ரஜினிக்கு கண்டிப்பாக இப்படம் சூப்பர் ஹிட்.. நெல்சன் ஜெயித்துவிட்டார். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி பக்கா ஆக்‌ஷனாகவும் படம் போகிறது. எந்த இடத்திலும் படம் போரடிக்கவில்லை என அவர்கள் தியேட்டர்களுக்கு வெளியே இருக்கும் யுடியூப் சேனல்களிடம் சொல்லி வருகின்றனர்.

இது தலைவர் ஷோ எனவும், தலைவர் எல்லாத்தையும் ஏறி மிதிச்சி போகிறார். தலைவரு நிரந்தரம்.. சூப்பர்ஸ்டார்னா அது தலைவர் மட்டும்தான் என அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: தள்ளுங்க.. தள்ளுங்க! ‘ஜெய்லரை’ பார்க்க ஓடிவந்த மில்லர் – தலை தெறிக்க ஓடிவரும் தனுஷ்

Next Story