Cinema News
சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?
Rajini: ரஜினி மற்றும் விஜய் இடையே இருக்கும் பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. ரசிகர்களும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றும் விதமாக சர்ச்சையான விஷயங்களை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு சொல்லி இருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாரிசு திரைப்பட விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட விழாவில் காக்கா கழுகு கதையை கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என்ற கேள்வி ஒவ்வொரு பிரபலத்திடமும் எழுந்தது.
இதையும் படிங்க: ஒரு சின்ன சீன் கொடுத்துட்டு அட்ஜெஸ்மெண்ட் கேட்டான் அவன்!.. நடிகை பகீர் பேட்டி!.
இதற்கெல்லாம் விஜயே தன்னுடைய லியோ வெற்றி விழா கொண்டாட்டத்தில் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் ஒருவர்தான் என முற்றுப்புள்ளி வைத்தார். பிரச்சினை அதோடு ஓய்ந்து விட்டதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் போது தற்போது ரஜினி ரசிகர்கள் மீண்டும் இந்த பிரச்சினையை பெரிதாக தொடங்கி இருக்கின்றனர்.
அதாவது விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் சஸ்பென்ஸ் என படக்குழு நினைக்கும் எல்லா சீன்களையும் பொதுவெளியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். இது குறித்து ஒரு ட்விட்டர் ஸ்பேஷில் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் செய்யாறு பாலு குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர்கள் பேசிய ஆடியோவையும் அதில் இணைத்திருக்கிறார். அந்த ஆடியோவில் இருந்து, படத்தில் ஒவ்வொருவருடைய கேரக்டர் குறித்த முக்கிய தகவல்களையும் பொதுவெளியில் வெளியிடணும். அப்போ படத்தில் சஸ்பென்ஸ் எல்லாம் சாக வேண்டியதுதான் எனவும் பேசிக்கொள்கின்றனர். ஸ்கிரிப்ட்டை மாற்றி வெளியிட்டால் என ஒருவர் கேள்வி கேட்க படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு டைம் அவர்களுக்கு கிடையாது எனவும் பேசிக்கொள்கின்றனர்.
இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இரண்டு பிரபலங்களின் ரசிகர்கள் சண்டைக்காக கோடிக்கணக்கில் முதலீட்டை போட்டு தயாரிப்பு செய்து வரும் கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திற்கு இப்படி நடந்தால் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும். இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கூட பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு காதல் கதையா? மனைவி தெரிஞ்சு என்ன பண்ணாங்க தெரியுமா?