Cinema News
கெஸ்ட் ரோல்னு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே!.. லால்சலாம் பாத்துட்டு பொங்கும் ரசிகர்கள்….
Lal salaam: நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக, வில்லனாக பல படங்களில் நடித்திருக்கிறார். மிகவும் குறைவான படங்களில் மட்டுமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ஆனால், மிகவும் குறைவான படங்களில் மட்டுமே ஒரு காட்சியில் வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ‘யார்’ படத்தில் உலக நன்மைக்காக ஸ்ரீராகவேந்திரா சாமியை பிரார்த்திப்பது போல ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
பாலச்சந்தர் கேட்டுக்கொண்டதால் அவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினியுடன் ஒரு பாடலில் கொஞ்ச நேரம் வந்து நடனமாடியிருப்பார். அதன்பின் அவர் கதை எழுதி தயாரித்த வள்ளி படத்தில் சில காட்சிகளில் வருவார். பி.வாசு இயக்கத்தில் உருவான குசேலன் படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோல் என சொல்லப்பட்டது. ஆனால், நிறைய காட்சிகளில் வருவார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க:நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…
இப்போது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள லால் சலாம் படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகவே சொல்லப்பட்டது. மேலும், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
லால் சலாம் திரைப்படம் இன்று காலை வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், ரஜினி வரும் காட்சிகள் கூஸ்பம்ஸாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும், ரஜினி கெஸ்ட் ரோல் என்று சொன்னதும் சில காட்சிகளில் மட்டுமே அவர் வருவார் என நினைத்துதான் படம் பார்க்க வந்தோம். ஆனால், படத்தில் நிறைய காட்சிகளில் ரஜினி வருகிறார். படம் முழுக்க ரஜினி படம் போலவே இருந்தது. இது எங்களுக்கு சர்ப்பரைஸாக இருந்தது.
இதையும் படிங்க: மொய்தீன் பாய் மிரட்டினாரா?.. உருட்டினாரா?.. லால் சலாம் லாபம் அள்ளுமா?.. விமர்சனம் இதோ!..
இந்த படத்தில் மத ஒற்றுமையை பற்றி பேசியிருக்கிறார்கள். ரஜினி படம் எனில் வழக்கமான அவரின் ஸ்டைலில் படம் இருக்கும் என நினைத்தோம். ஆனால், மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். மீண்டும் இந்த படத்தை பார்க்க வருவோம்’ எனவும் சிலர் கூறினார்கள்.
ஒருபக்கம், லால் சலாம் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருக்கிறது என ஒருபக்கம் செய்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். எப்படி இருந்தாலும் லால் சலாம் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினி!.. சரியான நேரத்தில் உதவி செய்த சிவக்குமார்…