Cinema News
ஜெயிலர் ஆடியோ விழாவில் அரபிக்குத்து பாட்டு!.. என்னப்பா தெரிஞ்சிதான் செய்றீங்களா!..
சமீபகாலமாகவே யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற டாப்பிக் ஓடிக்கொண்டிருக்கிறது. வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேச அது பற்றிக்கொண்டது. விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் அதற்கு முட்டுக்கொடுக்க, ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்கி எப்போதும் எங்கள தலைவர்தான் சூப்பர்ஸ்டார் என முழங்க சமூகவலைத்தளங்களே அலப்பறையானது.
ஒருபக்கம் மாவீரன் பட விழாவில் சிவகார்த்தியன்தான் அடுத்த ரஜினி என மிஷ்கினும் தனது பங்குக்கு ஒன்றை கொளுத்திப்போட்டார். மாவீரன் படத்தில் நடித்த சரிதாவோ சிவாவை குட்டிரஜினி என சொல்லிவிட்டார்.
கடந்த சில வருடங்களாகவே ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை. எனவேதான், ரஜினி இடத்தை பிடிக்க விஜய் போன்ற நடிகர்கள் ஆசைப்படுவதாக தெரிகிறது. ரஜினி வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பெறும் ஆசை விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் ‘நாங்களெல்லாம் அவரை பார்த்து வளர்ந்தவர்கள். ரஜினிதான் எப்போதும் நிரந்தர சூப்பர்ஸ்டார்’ என அவர்கள் சொல்வதே இல்லை.
இதையும் படிங்க: தனுஷ் இயக்கி பாதியில் நின்று போன படம்!.. மிரண்டுபோன நடிகர்.. கஷ்டமெல்லாம் வீணாப்போச்சே!…
சமீபத்தில் வெளியான ஜெயிலர் பாடலில் ‘‘இவன் பேர தூக்க நாலு பேரு! பட்டத்தை பறிக்க நூறு பேரு! குட்டி செவத்தை எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்கிற வரிகள் இடம் பெற்றிருந்தது. இது சூப்பர்ஸ்டார் படத்திற்கு ஆசைப்படும் விஜய் போன்ற நடிகர்களுக்கு ரஜினி கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது விஜய் நடித்த பீஸ்ட் படத்திலிருந்து அரபிக்குத்து பாடல் ஒலிக்கப்பட்டது. இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த பாடலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் விஜயை பற்றி தம்மட்டம் அடித்து பேசியதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒருபடம் ஹிட்டானதும் சம்பளத்தை ஏத்திய நடிகர்கள்!.. தோனி தலையிலயே மொளகா அரைச்ச நடிகர்….