நான் இத செஞ்சா மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள்...! ரஜினியிடம் கெஞ்சிய நடிகர்...
ரஜினியிடம் போராடிய நடிகர்...! கையெடுத்து கும்பிட்டு தப்பி ஓடிய சம்பவம்...
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாபெரும் ஜாம்பவனாக மக்கள் அந்தஸ்தை தன்னிறைவாக பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விறுவிறுப்புக்கு மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நடிப்பில் அதிகமாக மெனக்கிடும் மனப்பான்மை கொண்ட நடிகர் ரஜினியின் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அவர் நடித்த எந்திரன் படத்தில் அரங்கேறியது.
அதாவது எந்திரன் படத்தில் சாதாரண மனிதனாகவும் ரோபோவாகவும் நடித்திருப்பார் நடிகர் ரஜினி. அந்த படத்திற்காக அவர் கண்ணில் லென்ஸ் வைக்கும் பொறுப்பை பிரபல மண்வாசனை இயக்குனரின் மகனும் நடிகருமாகிய மனோஜிடன் ஒப்படைத்தாராம் நடிகர் ரஜினி.
மனோஜ் ரஜினியிடம் சார் லென்ஸ் வைக்கும் போது மேலேயும் பார்க்க கூடாது கீழேயும் பார்க்க கூடாது. ஒரே மாதிரியான நிலையில் இருங்கள் என்று கூற ரஜினியால் முடியவில்லையாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி ரஜினியிடம் தயவு செய்து வேற யாரையாவது அழைத்து லென்ஸ் வைத்துக் கொள்ளுங்கள். என்னால் முடியாது. ரஜினியின் கண்ணை குத்திவிட்டான் என்று தமிழக மக்கள் என் மேல் கோபப்படுவார்கள் என்று ரஜினியிடம் கெஞ்சினாராம்.