More
Read more!
Categories: Cinema News latest news

ரஜினி ரொம்ப அழுதது அன்றைக்குத்தான்! நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த நண்பர்

Actor Rajini : தமிழ் சினிமாவில் இன்று கொடி கட்டி பறக்கும் ரஜினி ஆரம்பகாலங்களில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார், என்னென்ன வேலைகளெல்லாம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார், எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பதை பற்றி ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் ஒரு பேட்டியில் கூறினார்.

ராஜ் பகதூரை பற்றி ஏராளமான மேடைகளில் ரஜினியும் பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட ரஜினியும் ராஜ் பகதூரும் 53 வருடகால நண்பர்களாம். இன்று வரை வாடா போடா நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்களாம். ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு ராஜ் பகதூர் ரஜினி சார் என்று அழைத்தாலும் ரஜினி கோபப்படுவாராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த வயசுல இவ்வளவு பேராசை ஆகாதுமா..கமல் கூட நடிக்க இதுதான் காரணம்..அபிராமியின் பளிச் டாக்..

அந்தக் காலத்தில் ரஜினியின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் தான் இருந்திருக்கிறது. அதனால் மூட்டைகளை தூக்கி வண்டிகளில் ஏற்றி இறக்கும் வேலைகள் செய்துதான் ரஜினி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாராம். அதன் பிறகே பேருந்து நடத்துனராக வேலையில் சேர்ந்திருக்கிறார். அவருடைய நண்பர் ராஜ் பகதூர் டிரைவராம்.

அப்போது பஸ் டிரைவர்களும் நடத்துனர்களும் சேர்ந்து அவ்வப்போது நாடகம் போடுவார்களாம். அப்படி போட்ட நாடகம் குருக்‌ஷேத்ரா. அதில் ரஜினி துரியோதனனாகவும் ராஜ் பகதூர் பீஷ்மனாகவும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் நடிப்பை பார்த்த ராஜ் பகதூர் உடனே சென்னைக்கு கிளம்பு. அங்கு இருக்கும் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா!.. கழுகுடன் கொஞ்சி விளையாடுறாரு.. அஜித்தை போல துப்பாக்கி சுடுறாரே!..

அப்போது கையில் பணம் இல்லாததால் ராஜ் பகதூர்தான் சில காலம் பண உதவி செய்திருக்கிறார். இப்படி பல நாள்களை கடந்த ரஜினி ஒரு நாள் இன்ஸ்டிட்யூட் சார்பாக ஒரு நாடகத்தை அரங்கேற்ற அதில் சிறப்பு விருந்தினராக பாலசந்தர் கலந்து கொள்ள ரஜினியை பார்த்ததும் பாலசந்தருக்கு ஒரு ஈர்ப்பு.

உடனே ரஜினியிடம் வந்து உடனே தமிழைக் கற்றுக் கொள் என்று சொல்லிவிட்டு அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க ரஜினி தன் நண்பரான ராஜ் பகதூரையும் அழைத்து பார்த்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ஒரே வாரத்தில் ஓய்ந்து போன ஜவான்… எல்லா இந்த தமிழ் ரசிகர்கள் தான் காரணமா?

அப்போது ரஜினி  மழ மழவென அழுதிருக்கிறார். ராஜ் பகதூர் என்ன என கேட்க ‘இல்லப்பா , முதன் முறையாக பெரிய திரையில் நான் தெரிகிறேன். அதை பார்த்ததும் அழுக வருகிறது’ என்று சொன்னாராம். அதற்கு அவர் நண்பர் இன்னும் நீ பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்தினாராம். இப்படி ரஜினியின் வாழ்க்கையில் பெரும் அங்கமாக இருந்தது அவருடைய நண்பரான ராஜ் பகதூர்.

மேலும் ரஜினி இந்தளவுக்கு எளிமையாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் பட்ட கஷ்டங்கள் தான் என்று ராஜ் பகதூர் கூறினார்.

Published by
Rohini

Recent Posts