
Cinema News
சூப்பர்ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா!.. கழுகுடன் கொஞ்சி விளையாடுறாரு.. அஜித்தை போல துப்பாக்கி சுடுறாரே!..
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தனது தந்தையை விட பெரும் புகழை பெறுவார் என்று தெரிகிறது. ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள சித்தாரா அங்கே செய்யும் சாகசங்களை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
ஏற்கனவே, தந்தையை மிஞ்சிய மகள் என்கிற புகழை விளம்பரம் ஒன்றில் நடித்து அந்த விளம்பரம் அமெரிக்காவின் டைம் ஸ்கொயர் பில் போர்டில் திரையிடப்பட்டு மிகப்பெரிய புகழை அடைந்தார். இதுவரை மகேஷ்பாபுவுக்கு கூட அந்த கௌரவம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கழுகு ஒன்றினை தனது கைகளில் ஏந்திக் கொண்டு எந்த ஒரு பயமும் இன்றி அதனுடன் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும், அங்கே ஹாக்கி விளையாடுவது, மற்றும் நடிகர் அஜித் போல துப்பாக்கி சுடுதலில் ஈடுபடுவது என மாஸ் காட்டி வருகிறார் மகேஷ்பாபுவின் மகள். கூடிய சீக்கிரமே தெலுங்கு திரையுலகத்தில் இளம் நடிகையாக சித்தாரா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெண்டு வருஷமா அந்தப் பக்கமே போகல! அஞ்சலி நடித்த படத்தால் இயக்குனருக்கு வந்த மிரட்டல்
அதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் மகேஷ்பாபு தனது மகளுக்கு வழங்கி வருகிறார் என்றே தெரிகிறது. படு க்யூட்டாக இருக்கும் சித்தாராவுக்கு இன்ஸ்டாகிரா்மில் 14 லட்சம் பேர் ஃபாலோயர்களாக உள்ளனர்.
நடிகர் மகேஷ் பாபு தற்போது த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அந்த படத்தில் ஸ்ரீலீலா எனும் இளம் நடிகை நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பான் வேர்ல்ட் படத்திலும் நடிக்கப் போகிறார் மகேஷ் பாபு.
சமீபத்தில், வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு மனதார பாராட்டுக்களை எந்தவொரு ஈகோவும் இன்றி தெரிவித்து இருந்தார் மகேஷ் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/CxIdTXvvjac/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==