Actor Rajini: தமிழ் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சி ஒரு மாபெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஹீரோவுக்கு உண்டான எந்த ஒரு தகுதியும் இல்லாமல் தான் இந்த சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். பரட்டை தலையுடன் கருப்பு நிற தோலுடன் ஏதோ கிடைத்தால் போதும் என வாய்ப்பை தேடி இந்த சினிமாவிற்குள் வந்தவர் தான் ரஜினி.
அப்படி இருந்தவர் திடீரென கே பாலச்சந்தர் கண்ணில் பட அந்த நேரத்தில் பாலச்சந்தருக்கு என்ன தோன்றியது என தெரியவில்லை. ரஜினியை பார்த்ததுமே அவருக்குள் ஒரு ஞானோதயம் பிறந்தது போல அபூர்வ ராகங்கள் படத்தில் முதன்முதலாக நடிக்க வைத்தார் பாலச்சந்தர். அந்தப் படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்ததன் மூலம் இந்த தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க:அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா படங்களிலும் ரஜினியை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ரஜினி அதன் மூலம் கிடைத்த புகழால் பைரவி படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்த படத்தில் நடிப்பதையும் தாண்டி அவருக்கே உரித்தான ஸ்டைலை காட்டியதால் அதோடு சேர்ந்து மக்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அதிலிருந்து ரஜினியை அனைவருக்கும் பிடிக்க ஆரம்பித்தது. தன்னை அறிமுகப்படுத்திய பாலச்சந்தரை தன் வாழ்நாள் முழுவதும் குருவாகவே ஏற்றுக் கொண்டார் ரஜினி. ஆரம்ப காலத்தில் பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இருந்தார் ரஜினி. யாருக்கும் அடங்காதவர். பாலச்சந்தருக்கு மட்டுமே அடங்குவார். இதைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பிரமிடு நடராஜன் கூறுகையில்.
இதையும் படிங்க: நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்
ரஜினிக்கும் பாலச்சந்தருக்கும் இடையில் அப்படி ஒரு அபூர்வமான உறவு இருந்தது. ரஜினியை எங்கு பார்க்கிறீர்களோ இல்லையோ பாலச்சந்தரின் அலுவலகம் சென்று பார்த்தால் அங்கு கண்டிப்பாக ரஜினி இருப்பார். அவரை தன் தெய்வமாகவே நினைத்து வந்தார் ரஜினி. பல சமயங்களில் ரஜினி கோபப்பட்டு பேசும் போது அவரை அடக்கக்கூடிய ஒரே ஆள் பாலச்சந்தர் மட்டும்தான்.
அந்த நேரத்தில் பாலச்சந்தர் முன்னாடி போய் நின்றால் போதும் அப்படியே பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் ரஜினி. பாலச்சந்தர் சொல்வதையே தன்னுடைய தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்வார். ஒரு இயக்குனருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுத்தவர் ரஜினி. படப்பிடிப்பின் போது பாலச்சந்தர் அந்தப் பக்கம் இந்த பக்கம் நடந்தால் கூட அடிக்கடி எழுந்து நின்று மரியாதை கொடுப்பார் ரஜினி .
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக சிம்புவைப் பட்டை தீட்டுகிறாரா கமல்…? மணிரத்னம் படம் வந்தா தான் விஷயம் தெரியும்..!
இதைப்பற்றி பாலச்சந்தர் பிரமிடு நடராஜன் இடம் நான் என்ன புலியா சிங்கமா எதுக்கு ரஜினி இப்படி நடந்துக்கிறான் என கிண்டலாக கேட்டதும் உண்டு. பல படங்களை ரஜினியை வைத்து இயக்கிய பாலச்சந்தர் அதன் பிறகு ரஜினி கமலுடன் இணையவே இல்லை. அதற்கு காரணம் அவர்களின் அபார வளர்ச்சி என பிரமிடு நடராஜன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
